பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் §§ பொருளாதாரம், சமூக அறிவு, வரலாற்றுண்மைகள், அறிவியல் ஆகிய கல்விகளால் பெரிதும் தாக்கம் பெற்றுள்ளது. பண்டை யக் கவிஞர்களான கிரேக்க ராப்ஸ்டிஸ்டுகள், தமிழகத்துப் பாணர்கள், புலவர்கள், ஐரோப்பிய நாட்டு வீரக் கதைகள் பாடுவோர், இவர்களைவிட இவனுக்குப் புறவுலகின் அறிவு மிக அதிகம். இதன் பாதிப்பு அவன் உள்ளத்தில் உண்டு. கல்வியில் பெரியவன் கம்பன்' என்று கம்பனைச் சிறப்பிப்ப துண்டு. அவனைவிட நமது உலகைப் பற்றி அறிந்தவர்கள் நமது கவிஞர்கள். - - பண்டைக் காலத்தில் அறிவியலும் கவிதையும் வெவ்வேறு துறைகள். ஒன்று இணைப்பு முறையையும் (synthesis) மற். றொன்று பதிப்பு முறையையும் (analytics) கையாண்டது. தற்போது இம்முறைகளின் இணைப்பு கவிதையுலகிலும் அறி வியல் உலகிலும் நிகழ்கிறது. ஈன்ஸ்டீனும் மாசேதுங்கும் கே. எஸ். கிருஷ்ணனும் அறிவியல் பணியும் புரிந்தார்கள்; கவிதையும் எழுதினார்கள். தற்போது தனித்துவ வேறுபாடு கள் அதிகம். உணர்வுபூர்வமான அகவாழ்க்கை (conscious mental life) சிந்தனை வேறுபாடுகளுக்குக் காரணமாகிறது. இவற்றை அவர்கள் பேச்சு மொழிகளில் வெளியிடுகிறார்கள். இவை சிந்தனை வேறுபாடுகளின் வெளியீடு. - சிந்தனையும் உணர்ச்சியும் தற்கால உலகில் கவிதையும் இலக்கியமும் உணர்ச்சிபூர்வமான சிந்தனையின் புறவெளிப்பாடு கவிதை. இது மனித உள்ளங்களை ஒரே உணர்ச்சி நிலைக்குக் கொண்டு வருகின்றது. பாரதியின் பாடல்களும் மாயா காவ்ஸ்கியின் கவிதைகளும் விடுதலை, சோசலிசம் என்ற கருத்துக்களை உணர்ச்சிநிலைப்படுத்துகின்றன. மார்க்ஸ் இக் கருத்துக்களைத் தர்க்கவயச் சிந்தனையாக வெளியிட்டார். ஆகவே, கவிதை வெளியீட்டு முறையில் தற்காலத்திற்கும் பண்டைக் காலத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. உள்ளடக்க மும் உருவமும் மாறுகின்றன. ஆயினும் கவிதை தனது தோற்றகால மந்திரத் தன்மையையும் கனவுலகக் கற்பனையை யும் இழந்துவிடவில்லை. சிந்தனையாலும் அறிவு ஆற்றலா லும், கவிதையின் கலைக்கரு மாறியுள்ளது. நிஜ உலகத்தி லிருந்து முரண்பட்ட கவிதையுலகு இவ்விரண்டு முரண்பாடு களின் ஒருமையாக இருந்தது. நிஜ உலகம் பற்றிய அறிவு அதி