பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

z}{3 நா. வானமாமலை கரித்துள்ளது. இது கவிதையுலகத்தைப் பாதிக்கிறது. உள் ளடக்கமும் வெளியீட்டு முறையும் மாறுகின்றன. ஆயினும் கவிதை என்பது இரு அகவயப் பொருள்களின் முரண்பாட்டின் ஒருமையாகவே உள்ளது. உணர்ச்சியைப் பண்டைய மனிதன் ஆடல் பாடல்களால் வெளியிட்டான். அதனோடு சேர்ந்து தான் கவிதை வளர்ந்தது. பின்னர் ஆடலிலிருந்து பாடல் விடுபட்டது. அதன் பின்னர் இசையிலிருந்து பாடல் விடு பட்டது. மந்திரவயமானச் சிந்தனை மேலும் மேலும் அறிவியலின் தாக்கத்தால் மறைந்தது. ஆயினும் கனவுலகம் அழிந்துவிடவில்லை. நிகழ்காலத்தில் இருந்து வருங்காலத்துக் குத் தாவும் கனவு இன்றும் கவிதையில் உள்ளது. இனியொரு விதிசெய்வோம் அதை எந்தநாளும் காப்போம் இது போன்ற கனவுகளின் வெளியீடாகக் கவிதை மிளிர்கிறது. தனி மனிதன், குழுக்களின் ஆர்வங்களின் வெளியீடாக இல்லா மல், தற்காலக் கவிதை உலக முழுவதையும் தனது அகன்ற எல்லையில் அனைத்துக்கொள்ளுகிறது. மந்திரப் பாங்கும் 'ஹிப்னாடிக் விளைவும் சிறிது குறைந்துள்ளது. ஆனாலும், கனவுலக நிகழ்ச்சி கவிதையிலும் இன்னும் இருக்கிறது. தற்கால மனிதன் அறிவியலின் துணையால் இயற்கையை மாற்றக் கற்றுக்கொண்டுள்ளான். தன் தேவைகளுக்காக இயற்கையை அடக்கி ஆளத் தெரிந்துகொண்டுள்ளான். புதிய பொருட்களையும் சக்திகளையும் தானே படைத்துக்கொண் டுள்ளான், பண்டைக் காலத்தில் உணவு தேடி இயற்கை அளித் ததைப் பெற்றுத் திருப்தி அடைந்த மனிதன், தற்காலத்தில் உணவை, எதிர்பாராத பொருள்களிலிருந்து அறிவியல் அறி வால் படைத்துக்கொள்கிறான். சாக்கடை நீரில் தோன்றும் அல்கேயிலிருந்து அவன் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தைப் பெறும் ஆற்றல் பெற்றுள்ளான். விறகிலிருந்தும் நிலக்கரியிலிருந்தும் பாறை எண்ணெயிலிருந்தும் வெப்பம் பெற்ற மனிதன், தானே படைத்துள்ள இணைப்புப் பொரு ளான சக்தியைத் தரும் (வெப்பம்) அல்கஹாலிலிருந்து தானி யங்கி இயந்திரங்களை ஒட்டப் பயின்றுள்ளான். உலகில் எப் பொருளின் இயல்புகளையும் கொண்ட பிளாஸ்டிக் வகை களைப் படைத்துள்ளான். பருத்தியிலிருந்து ஆடை நெய்வதற் குரிய இழைகளைப் பெற்று வந்த மனிதன் இன்று தானே செயற்கையான இழைகளைப் (Polyster, Terelene) படைத்துள்