பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 9: எான். உயிரினங்களின் மூலக்கருவான செல்லின் அமைப்பை அறிந்து, செல்லையே மாற்றும், உருவாக்கும் அறிவியலைப் படைத்துள்ளான் (bio-engineering). ஒரு புதிய கண்டுபிடிப் புக்கும் அதனைத் தொழில் நுட்பமாக மாற்றுவதற்கும் இடையே இருந்த காலஇடைவெளியைப் பெரிதும் குறைத்திருக் கிறான். அறிவியலை நேரடியாக உற்பத்திச் சக்தியாக மாற்றி யுள்ளான். இதனால் அவனது வாழ்க்கை புரட்சிகரமாக மாறி யுள்ளது. பண்டைய மனிதன் இயற்கையைச் சிறிதளவே தன்வயப் படுத்தி இருந்தான். அவன் அறியாத இயற்கை நிகழ்ச்சிகள் மிகப்பல இருந்தன. அவன் அறிந்த நிகழ்ச்சிகளுக்குக் காரணங் களை அறிய இயலவில்லை. அவ்வளவுக்கு அவன் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேறவில்லை. காரணங்களை அறியாத நிகழ்ச்சிகன் விருப்பத்தாலும் சடங்காலும் நிகழும் என்று நம்பினான். தான் விரும்பும் நிகழ்ச்சிகள் புற உலகில் சாத்திய மில்லை என்றாலும் கனவுலகில் அவற்றைச் சாதித்துக்கொண் டான். பறக்க விரும்பிய மனிதன் பறப்பதற்குத் தேவையான இயற்கை விதிகளை அறியாமல் கனவுலகில் பறப்பதாக நம்பி னான். இராமாயணத்தில் வரும் விமானமும் சீவகசிந்தாமணி யில் வரும் மயில் பொறியும் இத்தகைய கனவு நிகழ்ச்சிகளே. பண்டைய இயற்கையோடு தனது உள்ளத்தைத் தொடர்புபடுத் திக்கொண்டது கனவுகள், மந்திரம், சடங்குகள் மூலம்தான். தற்கால மனிதன் இத்தகைய தொடர்பை அறிவியலின் மூலம் ஏற்படுத்திக்கொள்கிறான். தற்கால மனிதன் வளர்ந்துள்ள அறிவியலின் மூலம் இயற்கையையும் உள்ளத்தையும் தொடர்பு படுத்திக்கொள்ளுகிறான். - பண்டைய மனிதன் கனவுகளைச் செயல்படுத்த எண்ணி முயன்றபோது வெற்றி பெறவில்லை. மனிதன் வானில் பறக்க விரும்பினான். விருப்பம் உடனே செயலாகிவிடாது. இக் கருத்தை ஒர் ஆங்கிலப் பழமொழி விளக்குகிறது: "விருப்பங் கள் குதிரைகளானால் பிச்சைக்காரர்கள் சவாரி செய்வார்கள்' (If wishes were horses then beggars would ride). Surroflá; பறக்க விரும்பிய டாடுலஸ் என்ற கிரேக்கனும் அவனது மகன் இகாரசும் இயற்கையில் பறக்கும் பறவையைக் கண் டார்கள். அது போலவே இறகுகளை மெழுகால் கையில் ஒட்டிக்கொண்டார்கள். பறக்க முயன்றார்கள். வெயிலின் வெப்பம் மெழுகை உருக்கிவிட்டது. ஒட்டிக்கொண்ட இறகு கள் உதிர்ந்துவிட்டன. இகாரஸ் கடலில் விழுந்து மாய்ந்: தான். பறக்கும் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள பறத்தல் பற்றிய அறிவியல் அறிவு தேவை. பறத்தல் என்னும் கனவைச்