பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நா. வானமாமலை செயல்படுத்த 'அனுமானம் என்ற தருக்க முறையை அவர்கள் தவறாகப் பயன்படுத்தினர். அறிவியல் அறிவு இல்லாததால் தருக்க முறை தோற்றுவிட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின் காற்றைவிடக் கனமான பொருள்கள் வானில் பறக்க, புவிக்கவர்ச்சிக்கு எதிரான ஒரு சக்தியை உருவாக்கவேண்டும் என்ற அறிவியல் விதியைப் பயன்படுத்தி ரைட் சகோதரர்கள் (Write Brothers) ஒரு சிறிய விமானத்தைச் செய்து அதில் பறந்தார்கள். இகாரஸ் பறக்க முயன்று கடலில் விழுந்து 2000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ரைட் சகோதரர்களால் பறக்க முடிந்தது. கனவும் விருப்ப மும், உண்மையான நிகழ்ச்சியைச் சாதிப்பதில் அறிவியல் அறிவும் அதனைப் பயன்படுத்தும் தொழில் நுட்பமும்தான் விமானத்தை உருவாக்கப் பயன்பட்டன. இச்செயலை நிகழ்த்த அறிவியலும் தொழில் நுட்பமும் குறிப்பிட்ட அளவு வளர்ச்சி பெறவேண்டும். பறக்கும் நிகழ்ச்சியைச் சாதிக்கப் பறப்ப தாகக் கனவு கண்டால் மட்டும் போதாது. பறக்கும் நிகழ்ச் சியை நிகழ்த்தத் தேவையான அறிவியல் அறிவும் தேவை. இவ்வறிவு கருவிபுனையும் தொழில் துட்ப அறிவாக மாற்றப் படவேண்டும். மூளையின் உழைப்பும் கையின் உழைப்பும் இணைக்கப்படவேண்டும். கையின் சக்தியை மூளையின் சக்தியால் பல மடங்கு பெருக்கிக்கொள்ளவேண்டும், அறிவியலும் கவிதையும் நாகரிக சமுதாயம் இயற்கையின் போக்கில் பொருள் களைப் பெற்றுக்கொள்வது மட்டுமில்லாமல், அவற்றைப் புதிதாகவும் படைத்துக்கொள்ளுகிறது. கற்கால மனிதன் மிகச் சில பொருள்களையே பயன்படுத்தினான். ஆனால் தற்கால மனிதன் நூற்றிநான்கு தனிமங்களையும் அவற்றின் முப்பது லட்சம் கூட்டுப் பொருள்களையும் அறிந்தும் படைத் தும் பயன்படுத்துகிறான். இவற்றில் மிகச் சிலவே இயற்கையில் உள்ளன. இவற்றைத் தனது அறிவியல் அறிவால் கூடச் செய்து, தனது வாழ்க்கையின் பல உற்பத்தித் துறைகளிலும் பயன் படுத்துகிறான். கடந்த முப்பது ஆண்டுகளில் அறிவியலின் வேகமும் அதன் பயன்பாட்டால் வளர்ச்சி பெற்றுவரும் தொழில் நுட்பத்தின் வேகமும் மிக மிக வளர்ந்து வருகின்ற அறிவியலும் தொழில் நுட்பமும் பொருள், சக்தி உற்பத்தி களைப் பன்மடங்காக்கியுள்ளன. இந்த நிகழ்ச்சிப் போக்கை ‘e?SGfrent Ggfrgflé GILLIL Ligi'-st” (Scientific technological revolution) என்று அழைக்கிறோம். இத்துறைகளில் முன்