பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 9 –

தினை, யா, ஓமை முதலியன யானை விரும்பும் உணவுகளாகும். இவ்விலங்கின் சிறப்பினை,

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன் !”

"யானை வரும் பின்னே;
மணியோசை வரும் முன்னே!"

என்னும் தமிழ் நாட்டுப் பழமொழிகளால் நன்கு அறியலாம்.

குறிஞ்சி நில மக்கள் விலை உயர்ந்த யானைக் கொம்புகளை விற்று வாழ்ந்தனர். இதனது கொம்பால் தேர் இயற்றப்பெற்றது.

"பனைமருட டக்கையொடு முத்துப்பட முற்றிய
உயர் மருப் பேந்திய வரை மருணோன்பகடு"

என்ற புறநானூற்று வரிகள் வேழத்தினது முற்றிய கொம்பில் முத்துண்டாம் எனக் கூறுகின்றன.

தமிழ் நாட்டு மன்னர்கள் வெற்றி வீரர்களாய் விளங்குவதற்கு வேழப் படையே பெரிதும் உதவியது. தமிழ்ப் பெரு மன்னர்கள் அன்று வேழப் படையின் துணை கொண்டே பெரும் பெரும் வெற்றிகளைப் போரில் பெற்றனர். கடிய அரண்களையும், வலிய கோட்டை வாயில்களையும் தகர்த்து எறிவதற்கு யானைகளே பயன்பட்டன. வள்ளல்கள் பரிசிலர்க்கு யானைகளைப் பரிசுகளாக வழங்கினர். பண்டு பெண்டிரும் பிடியின் மீது ஊர்ந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதனை,

"வாழி சோழகுல சேகரன்வ குத்த விசையின்
மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா