பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. பறவைகள்

பறவைகளின் பொதுப் பண்புகள்

விலங்குகளைப் பற்றி விளக்கமுறப்பாடியிருப்பது போலவே நம் பைந்தமிழ்ப் புலவர்கள் பறவைகளைப் பற்றியும் பலபடப் பாடியுள்ளனர். அன்றில், அன்னம், எழால், கணந்துள், காக்கை, கிளி, குயில், குருவி, குறும்பூழ், கூகை, கொக்கு, கோழி, நாரை, நுளம்பு, பருந்து, புறா. மகன்றில், மயில், யானையங்குருகு, வங்கா, வண்டு, வெளவால் முதலியன தமிழ் நாட்டுப் பறவைகளாகும். பறவைகள் ஓரிடத்துத் தமக்கு வேண்டிய உணவு கிடைக்காவிடின் தம் கூட்டையும் உறையும் காட்டையும் நீங்கி வேறிடத்திற்குச் செல்லும். மேலும் இவைகள் பழம் உண்ணும் பொருட்டுப் பழுமரம் நாடிச் சென்று திரும்புதல் வழக்கமாகக் கொண்டுள்ளன. இது போன்றே பண்டைக் காலத்தில் பசுந்தமிழ்ப் புலவர்களும் வரையாது வழங்கும் வள்ளல்களை நாடிச் செல்லுதல் மரபாகும். இதனை,

'பழுமரம் உள்ளிய பறவையின் யானும்,'
'பழு மரம் தேரும் பறவை போல,'

என்பவற்றால் அறியலாம்.

பறவைகள் அதிகாலையிலேயே, துயில் நீங்கி பல்வகை. இசைக் கருவிகள் ஒருசேரச் சேர்ந்து ஒலித்தல்போல

இன்னிசை எழுப்பி எங்கும் சென்று பழங்களையும்,பலவகை மலர்களின் தாது, தேன் முதலியவற்றையும் அருந்தி அகமகிழும் தன்மையன ஆகும். மாலையில் புட்கள் தம் கூடுகளுக்குத் திரும்பி ஓய்வு எடுக்கும். மாலையில் திரும்பும் பொழுதும் பறவைகள் ஒலிக்கும். மேலும் வானம்