பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

போது இன்னும் என்ன இலக்கிய ஆதாரம் வேண்டும்? திருமுரு காற்றுப் படையில் உள்ள "குன்று தோறாடல்" என்பதில் திருப்பதி மலையும் அடங்கி விடுமே-என்று கூறினார். அதற்குச் சித்தன், எல்லாக் குன்றுகளிலுமா முருகன் ஆடுகிறார் (அல்லது முருகன் கோயில் உள்ளதா) என்று வினவினார். இது என்ன கேள்வி: செங்குத்தாயும் உச்சி கூராயும் குவிந்தும் உள்ள மலைகளில் கோயில் கட்ட முடியவில்லை. ஒரளவு சரிவாயும் உச்கி ஒரளவு தட்டையாயும் உள்ள மலைகளில் முருகன் கோயில் கட்டியுள்ளனர். இஃது இயற்கைதானே!

கந்தபுராணத்திற்குக் கல்லறை

பின்னர், திரு பழநி பிள்ளை "கந்த புராணத்தில்" என்று தொடங்கினார்; இன்னும் ஏதும் சொல்வதற்குள் கோபாலய்யர் கந்த புராணம் பிற்காலத்தது என்று உதறி விட்டார். திரு. சித்தன், கந்த புராணம் ஒரு புராணமா? அது கந்தல் புராணம் என்று கூறிக் கந்த லாக்கி விட்டார். இவ்வாறாக இருவரும் சேர்ந்து கந்த புராணத்திற்குக் கல்லறை கட்டி விட்டனர். தமிழ்த் தெய்வம்-தமிழ் முருகன் என்றெல்லாம் எப்படியோயாராலோ போற்றப் பெறும் முருகனைப் பற்றியது கந்த புராணம்-முருகன் தமிழ் நாட்டில் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டதாகக் கூறுவது கந்த புராணம். இந்த நூலுக்குக் கல்லறை கட்டப்பட்டது. கந்த புராணம் போலவே ஊசிப்போன கதைப் பகுதிகள் பல அடகிேயுள்ள பாரதம், பாகவதம், இராமாயணம், இன்ன பிற நூல்கள் கந்த புராணத்தின் கல்லறைமேல் களிநடம் புரியட்டுமே!

பாண்டுரங்கனாரின் பரிந்துரை

இந்த நேரத்தில், சங்கத்தின் பொருளாளராகிய திரு. கோ. பாண்டுரங்கன் என்பவர், திருப்பதி மலைக்-