49
இல்லாமல்—அள்ளாமல்
இலக்கியச் சான்று வேண்டுவோர்க்கு இதுவரை கூறிவந்த சான்றுகள் போதாவா? முருகன் காவடி ஒருபுறம் இருக்க, வேறு ஊர்களைப் பற்றி இவ்வாறு கூறாமல், இந்த வேங்கடத்தைப் பற்றி மட்டும் இவ்வளவு சிக்கலும் குழப்பமும் உண்டானதற்கு உரிய காரணமென்ன?- என்பதை மீண்டும் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். இராமாநுசரே மாற்றுக் கொள்கையையும் குறிப்பிட்டுள்ளாரே. எங்கள் குடும்பத்தில் நடைபெறும் படையல் முறைக்கு-கடவுள் வழிபாட்டு முறைக்கு எந்த இலக்கியத்திலும் சான்று இல்லை. நாங்கள் செய்வதே வழி வழிச்சான்று. காவடியும் இன்னதே.
"இல்லாமல் பிறக்காது-அள்ளாமல் குறையாது’ என்னும் பழமொழி நூற்றுக்குநூறு பொருந்தாவிடினும் பெரும்பாலும் பொருந்தும். எனவே 'அரோகரா’ போடலாம். -
"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"
"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"
"திருப்பதி-திருமலை முருகனுக்கு அரோகரா"
- "சாமி மலையேறி விட்டது."
கோவிந்தா - கோவிந்தா
யான் இவ்வாறு எழுதியதால் என்னை மத வெறியன் என்று எவரும் எண்ணலாகாது "எம்மதமும் சம்மதம்" என்னும் கொள்கையுடையவன் யான். உண்மை விளம்பியான். பின்வருவனவற்றை யான் கூட்டத்திலும் கூறினேன். எங்கள் குடும்பத்தில் சைவ வைணவ வேறுபாடே கிடையாது. எங்கள் குடும்பத்துக் குழைந்தைகட்கு