பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இவ்வாறு பழந்தமிழ் மரபுப்படியேயும் இலக்கியத் தோடு அரசியலை இழைத்து விட்ட கலைஞர் அரசியல் கலப்பற்ற அழகுத் தமிழ்க் கவிதை-இயற்கை இன்பக் கவிதை-புத்துவகைக் கவிதை-பாடுவதிலும் வல்லவர் என்பதை உடனடியாகவே புலப்படுத்துகிறார். ஆனால் அந்த நேரத்திலும் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கானும் முதல்வர் உழவனின் - உழவை - உழத்தலை - உழைப்பை மறக்கவில்லை! இன்னும் சொல்லப் போனால் இயற்கை மழையிலும்-பாடுபடும் உழவனின் உடல் வியர்வையே பொங்கல் அறுவடைக்கு அடிப்படை என்பதை நயனும் பயனும் தோன்ற நவில்கிறார். அவ்வாறு பாட்டிலே பாட்டாளியின் பாட்டை அரங்கேற்றி வான்சிறப்பிலும் வியர்வைச் சிறப்பை உலகம் உணர்ந்து உருகச் செய்யும் கலைஞர் பெருந்தகை அவன் பாட்டால் விளைந்த பயிர் முற்றித் தலை சாய்ந்திருக்கும் தன்மை யைத் தன்பாட்டால்-புது உவமைக் கற்பனையோடு பாடும் பாட்டோ பாட்டு. அது இது: உழவரது வியர்வையினால் சூல் கொண்ட கழனித்தாய் தன் வயிற்றில் மகளாய் வந்து அனைவரது சீராட்டும் பெற்றுக் கொண்ட கதிராம் மங்கை மணவறையிற் பொன்போலத் தலைகுனிந்து நிற்கின்றாள் பொங்கல் நாளில் ! புத்துவமைக் கவிஞர் - கலைஞர்க்கு நம் பொங்கல் - வாழ்த்துகள்-வணக்கங்கள். நாளும் கலைஞர் தம் புகழ் கேட்டுத் தாம் நாணி தலை சாய்ந்திருப்பதை முற்றி வளைந்த கதிருக்கு முழு உவமையாய்ச் சொல்லும் கலைஞர் தாசன்-கவிஞர் தாசன் கருவாகி உருவாகிக் காற்றென - பொங்கல் கரும்பென - பொலிந்து வரு శషి "ఖిyr