பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை டாக்டர் சிலம்பொலி சு. செல்லப்பன் (இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்)

  • இலக்கியத் தலைவர் கலைஞர் எனும் இந்நூல் கலைஞர் பற்றி, ஆய்வுச் செம்மல் பேராசிரியர் ந. சஞ்சீவி யார் எழுதியுள்ள பதினாறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப் பாகும்.
  • பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவது மரபு. என் கட்டுரைகள் பதினாறையும் பெறுகின்ற நீவிர் பல்லாண்டு பல்லாண்டு பயன் பெருக்கி வாழ்வீராக’ எனப் பேராசிரியர் சஞ்சீவியாரின் எழுத்து வாழ்த்தாக தலைவர் கலைஞர் அவர்களின் 66ஆவது பிறந்த நாள் விழாவின்போது இந்நூல் வெளியிடப்பெறுகிறது. கலைஞர் பதினாறு பேறுகள் பெறுவது மட்டும் அன்று: அவர் என்றும் பதினாறாய்ப் பெருமை பூத்துச் சிறக்க வேண்டுமெனும் சஞ்சீவியாரின் ஆவல் இந்நூலிலுள்ள பதினாறு கட்டுரைகளிலும் ததும்பி நிற்பதை நன்கு உணர

戟*彦。 கலைஞரின் சிலப்பதிகார நாடகக் காப்பியத்திற்கு’ப் பேரறிஞர் அண்ணா அளித்துள்ள முன்னுரையை விளக்கிக் கலைஞரைப் போற்றும் கட்டுரை 1; கன்னித் தமிழ்க் காவலராம் கலைஞரின் குணநலன்களைக் கொஞ்சு தமிழில் கூறுகின்ற கட்டுரைகள் 3; கவிஞர் முதல்வராம் கலைஞரின் கவிதைகள் பற்றிய திறனாய்வுக் கருத்துகளைத் தாங்கி நிற்கும் கட்டுரைகள் 9: தன் வரலாறு என்பதினும் நம் காலத்தின் தமிழ் வரலாறு-தன்மான இயக்க வரலாறு என்று போற்றுதற்குரிய கலைஞரின் நெஞ்சுக்கு நீதி"