பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 56 எனவே நெஞ்சுக்கு நீதி ஆய்விலும் பார்வையையே தலைமையாகப் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் அடியேன் இன்னும் பல்கலைக்கழகப் பணியில் இருப்பதாலும் கலைஞரே ஒருமுறை தம் மகனைப் பற்றிக் குறிப்பிட்டது போல் அரசியல் நெருப்பை இந்த இளந்தளிர் தாங்க முடியாது-அதுவும் தமிழ்நாட்டில், தாங்க முடியாது, ஆதலாலும்-அரசியல் பற்றிய என் கருத்துகளை அடக்கி ஒடுக்கிக் கொள்கிறேன். கலைஞர் தமிழினத்தின் தலைவராய் இருக்கப் பெருந் தகுதி படைத்தவர் என்பது நெஞ்சுக்கு நீதி' நூலைப் படிப் பதற்கு முன்பு என் உள்ளத்தில் இருந்ததிலும் இப்போது அதிகமாய் உள்ளது. தனிப்பட்ட முறையிலும் அவரிடம் எனக்குள்ள மதிப்பு உயர்ந்துள்ளது. காரணங்கள் கம்ப்யூட்டர் போன்ற அவர் அறிவும் செயலாற்றலுமே. கலைஞரின் பெயரில் உள்ள முதல் முடிவெழுத்துகளைச் சேர்த்தால் கதி’ என்று வரும். தமிழுக்குத்-தமிழ் மக்களுக்கு-அதிலும் அடிமட்ட நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு அவரே கதி’ என்று போற்றப்படும்படி அவர்தம் வாழ்வு அமைய வேண்டுமென்றும் விழைகிறேன். எப்படி காங்கிரசை வளர்த்தது பிரிட்டிஷ் அடக்கு முறைகளோ அப்படியே (சிறிய அளவில்) திராவிட இயக் கத்தை வளர்த்தது காங்கிரமே என்பது நெஞ்சுக்கு நீதி' யால் தலைமையாகத் தெளிவாகிறது. காங்கிரஸ் வளர பிரிட்டிஷ் பேரரசு தேவை : திராவிட இயக்கம் வளர காங்கிரஸ் கட்சி போதும் தானே ? ! வளர்ச்சிப் பாதையில் வழி காட்டியவர்கள் வழுவும் போது எதிர்ப்பது ஏற்புடையது என்ற என் கருத்து =நெஞ்சுக்கு நீதி' யைப் படிப்பதால்-திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்து கொள்வதால்-உறுதிப்படுகிறது. ஆனால் எது வழு ?" என்பது ஒரு பெரு வினாவே ! என் வாழ்க்கையில் யான் கண்ட அரிய பெரிய காட்சி களுள் ஒன்று கலைஞர் முதல்வராய் இருந்த காலத்தில்