பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 தொடர்ந்து துணைவேந்தராய் இருக்க முயன்று முடியாமற். போன நேரத்தில் பேராசிரியர் டாக்டர் தெ. பொ. மீ. டாக்டர் கலைஞரின் சிலப்பதிகார நாடகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். இதன் காரணம் ? ! இனி, நெஞ்சுக்கு நீதி" பற்றிய ஆய்வைத் தொடங்கு வோம். எப்படித் தொடங்குவது ? எப்படி முடிப்பது ? சிக்கல்தான். என்றாலும் நீரில் குதித்து விடுவோம்; இதுகாறும் கற்ற நீச்சல் கலை அப்படியா நம்மைக் கை விட்டுவிடும் ? நம்பிக்கையைக் கைவிட்டால் வேறு எந்தக் கைதான் கை கொடுக்கும்? தும்பிக்கையிலும் நம்பிக்கையே நற்றுணை தும்பிக்கையை (இதை அண்மையில் நேப் பாளத்திலும் நிரம்பக் கண்டேன்) நம்புவதும் தன்னம்பிக் கையால் ஏற்படும் மன அழுத்தம் (tension) இல்லாமல் இருக்கத்தானே : இந்த உளவியல் உண்மை ஒரத்தக்கதுஒரங்கட்டத் தக்கதன்று ! நெஞ்சுக்கு நீதி" பற்றிய சில தலைமையான கருத்து களை ஒருவகை முன்னுரிமை அடிப்படையில் காண்போம். உடல் நடை : உயிர் கருத்து-உயிர் என்ற ஒன்றுதான் தனித்து இல்லை என்கிறார்களே-எனவே நடை-புறம், கருத்து-அகம் என்று முன்னுதல் முறை அவ்வகையில் முதலில் தோன்றும் நிறை-அழகு தமிழில் ஆக்கப்பட்ட நூல் நெஞ்சுக்கு நீதி’ என்பதாகும். இரண்டாவது கலைஞருடைய காலம்-திராவிட இயக்கத்தின் காலம். என் போன்றோரின் சம காலமே. யான் பிறந்து வளர்ந்த ஊர் திருச்சிராப்பள்ளி ; யான் படித்தது சென்னை : அதிலும் அண்ணாவும் படித்த பச்சையப்பர் கல்லூரியில். யான் முதலில் பத்தாண்டுகள் (1950-60) பணி புரிந்ததும் அண்ணாவாலும் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் பச்சை யப்பர் கல்லூரியில் ; பின்னர் (1960 முதல்) இந்நாள்வரை பணிபுரிவதும் சென்னைப் பல்கலைக் கழகத்தில்: காலம், களம் இரண்டாலும் திராவிடக் கழகம்-திராவிட