பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? பேரறிஞர் அண்ணா த ம் முன்னுரையில் முன் குறிப்பிட்டதுபோலச் சிலப்பதிகாரச் சிந்தனையில் நெடு நேரம் ஈடுபட்டுவிட்டு அச்சிந்தனைகட்கு உடனடிக் காரணமாய் இருந்த கலைஞரின் எழுத்தோவியத்தை எண்ணியதும்-மடை திறந்தாற்போல அவர் மனம் திறந்ததும்-வந்த சொற்களின் முதற்பகுதியைத்தான் இப்போது பார்த்தோம்-அதில் இரு கூறுகள் : (1) பெருங் கலைஞர் சிலப்பதிகாரக் காப்பியத்தை உரைநடை நாடக மாக ஆக்குவதற்குப் பெற்றுள்ள உரிமை-பேரறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சியில் அந்த உரிமைக்கு உரிய தகுதிகள் (1) தமிழ் ஆளுந்திறன், (2) பாத்திரங்களைப் படைக்கும் உயர்தனி ஆற்றல். இந்த இருதிறனுமே ஊரும் உலகமும் அறிந்தது அறிந்து மகிழ்ந்தது : மகிழ்ந்து பாராட்டியது என்று அந்தாதித் தொடையில் போற்றப் படுகிறது. இனி, கலைஞர் கதையில் செய்த மாற்றங்கட்கும் காரணம் சொல்கிறார் பேரறிஞர் அண்ணா. அது இது : 1. நம்மால் விளக்கமளிக்க முடியாதது போலவும், நமக்குத் தேவையில்லாதது போலவும் தோன்றுகின்ற சம்பவங்கள் சிலவற்றிற்கு, 1. காரண காரியத் தொடர் புடையதும், 2. நம்பத் தக்கதுமான மாற்றங்களைச் செய்திருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் சொற்கள் எவ்வளவு அளவை நெறி (Logical) பற்றியன என்பதும் எவ்வளவு பகுப்பாய்வுத் திறம் (Analytical) பற்றியன என்பதும் தெளிவு. இனி, கலைஞர் கதையில் செய்த முதற்பெரு மாறுதலைகிரேக்க வணிகன் பாத்திரத்தை - நியாயப்படுத்துகிறார். அதில்தான் எவ்வளவு அறிவு ஆற்றல்! துருப்புச் சீட்டைத் துரக்கி எறிவது போலத் தானாக மாதவி வீட்டுக்குப் போக விரும்பாத கோவலனை அறிவுரை புகட்டப் போகுமாறு: