பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பொற்கொல்லர் அல்ல-பாண்டிய நெடுஞ் செழியனின் அரண்மனைக் காவலன் ஒருவன்தான் உண்மையான குற்றவாளி என இந்நூலில் குறிக்கப் படுகிறது. சமூக நீதிக்காக இந்த மாற்றம் செய்யப் பட்டது. இத்தகைய மாற்றங்களைப் பழம்பெரும் இலக்கியங்களில் செய்வது மிக மிக நியாய மானது; தேவையானது. இந்த மாற்றம் மிகச் சிறந்த நோக்கோடு செய்யப்படுகிறது. இந்த மாற்றத்தைப் பாராட்டி-வாழ்த்திய வர்கள் பழிக்கூறப்பட்ட அந்தச் சமுதாயத்தினர் மட்டுமல்லர்; பழம்பெரும் இலக்கியங்களினை நவீன முறையில் தருபவர்களும் வாழ்த்தி புள்ளனர்; பாராட்டியுள்ளனர். ஆம், பேரறிஞர் அண்ணா பாரதியின் பாஞ்சாலி சபதம்’ போன்ற பல நூல்களைப் படித்தவர்தானே ! அதனால் பேரறிஞர் அண்ணாவின் புகழுரை முற்றிலும் பொருத்தும். இங்குக் கருதத்தக்க சிறப்பெல்லாம் அப் புகழுரையின் உயிராய் ஒளிரும் ஆய்வுரையே ஆகும். அவ்வாய்வுரையின் பயனாகப் பெருங்கலைஞரின் சமுதாயப் பொதுவுள்ளம்-ஒருவர் செய்த பிழைக்காக ஒரினமே தண்டிக்கப்படுவதைத் தாங்காத உயர்ந்த உள்ளம்-மலை மேல் வைத்த மணி விளக்கு ஆகின்றதல்லவா ? இனி, பேரறிஞர் அண்ணா கதை மாற்றங்களைக் கடந்து இளங்கோ அடிகளும் அவர் தம்பியும் பெரிதும் ஒன்றுபடும் இடத்தை மறுபடியும் சுட்டிக் காட்டுகிறார். இந்த மாற்றம் தவிர. இக்காப்பியத்தின் முழு உருவம்-உரைநடையில் பாராட்டத்தகும் வழியில் அமைக்கப்பட்டிருக்கிறது.