பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 இந்த வரிகளில் நேரடியாகப் பாட்டாளிகளை கலைஞர் குறிப்பிடவில்லை. என்றாலும்-ஏழையே பாட்டாளியாக - பாட்டாளியே ஏழையாக - இன்னும் இருக்கும் நிலைக்கு இது பொருந்தும் அல்லவா ? 7 தமிழர் திருநாள்-பெரு நாள்-பொங்கல் ஒரு நாள்: அந்நாளின் சிறப்பினைக் காட்டும் கவிதை ஒன்றுமுண்டு. அதில் முதல்வர் - கலைஞரின் முத்துக் கருத்துகள் முழுநிலா ஒளி வழங்குகின்றன. வான் முட்ட எழுந்து கிற்கும் ஆலையிலே தான்மட்டும் வாழுதற்குச் சிலர் இருந்தால் பேன்பிடித்த தலையாகும் நமது நாடு: கான் படித்த மருந்ததற்குச் சமதர்மங்தான்! அங்கிலைதான் வருதல் மட்டும் இங்கிலையில் உழைப்போர் வாழ வகை காணல் மிகவும் நன்று-அதற்கு வாய் திறந்து சூளுரைப்போம் இன்று ! பூட்டுப் போடவில்லை; பொதுவுடைமைக் கொள்கைதனைப் புறக்கணித்தும் பேசவில்லை ஏட்டுக்குள் இருக்கின்ற அக் குறிக்கோள் நாட்டுக்குள் மெல்ல மெல்ல வந்தே தான் தீர வேண்டும் பாட்டுக்குள் பொதிந்துள்ள கருத்தெல்லாம் பரவுமுன்னே பாங்காகத் தொழில் அமைய நம் காட்டில் கூட்டான அமைப்புக்கள் பெருகிடவே பொங்கல் நாளில் புதிய பாதை ஏற்றிடுவோம்: இனிய பாதையிதை இடைக்காலப் பாதை யென்போம், பின்னர் கணிய வைப்போம் கற்களையே t (ப. 128) இந்தப் பாட்டால்-பாடல் பகுதியால் இந்தத் தமிழ் நாட்டைப் பொதுவுடைமைப் பூங்காவாக ஆக்கக் காலம்