பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 இந்த வரிகளுக்கு இணையாக அமையும் இரு வரிகளை இதோ கணக் கிட்டுக் காணலாம்: பாட்டாளியின் வியர்வையிலே முதலாளி பார்ப்பதுதான் பணக்கணக்கு (u. 139) 9 இக் கட்டுரைக்காகக் கலைஞர் கவிதைகளில் நாம் ஆய்ந்தெடுத்த சான்றுகளுள் இன்னும் இரண்டே எஞ்சி புள்ளன. அவற்றுள்ளும் முதன்மையான ஒன்றை ஈண்டுக் காண்போம். பாராளும் நம் முதல்வரின் பாட்டாளிப் பரிவினுக்குப் பட்டயமாக விளங்கும் ஒப்புயர்வில்லா வரிகள் இவை எனலாம். இறைமைதனைத் தமிழின்மால் காண்பதிலும் ஏழைத்தமிழர் சிரிப்பினிலே காண்பதுவே சிறப்பென்போம்- (ப. 167) இந்த வரிகளை ஊன்றிக் காண்பார் நம் கலைஞருக்குத் தமிழ் உடல்தான், ஏழைத் தமிழர் வாழ்வுதான் உயிர் என்ற உண்மை உணர்வர். தமிழினிடத்தில் தெய்வத் தைக் காண்பதிலும் ஏழைத் தமிழன் வாழ்விலே அத்தெய் வத்தைக் காண வேண்டுமென்ற நம் கவிஞரின் சொற்கள் திருமூலர் தெய்வச் சொற்கள் அன்றோ? இவ்வரிகள் இருப தாம் நூற்றாண்டுத் தமிழ் பெற்ற பேறாகும். 10 கலைஞரின் கவிதைத் தொகுப்பில் அழியாக் கவிதையாய் விளங்குவது "இதயத்தைத் தந்திடு அண்ணா" என்ற தலைப்பில் நம் முதல்வர் பெருந்தகை எல்லார் இதயத்தையும் பெற்றிடுமாறு பாடியுள்ள வான் கலத்த பெருங் கவிதையேயாகும். அண்ணாவின் புகழ் போல் அழியா வாழ்வு பெறத்தக்க அக்கவிதையில்