பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-31-

குறைவும்‌, வெற்றுச்‌ சொற்புணர்ச்சியும்‌ தெற்றெனப்‌ புலப்‌படுகின்றன. இலக்கிய நீள்‌மை அவற்றில்‌ மிகுந்து காணப்‌பெறுகின்றது; சமயவெறியும்‌, மூட நம்பிக்கைகளும்‌ அவற்றில்‌ மிகுந்திருக்கின்றன; போர்‌ வெறிகள்‌ குமிழியிடுகின்றன. இவ்வார வாரப்‌ போலியுணர்ச்சிகளிடையே மொழி ஒரு பொருட்டாக மதிக்கப்‌ பெறவில்லை. பிற்கால இலக்கியங்கலில்‌ மொழி விழ்ச்சியுற்றதற்கு அறிவுக்‌ குறைவும்‌ ஒரு காரணியமாகும்‌. மக்களின்‌ அறிவு வளர்ச்சியைப்‌ பொறுத்ததே மொழி வளர்ச்சியும்‌. அறிவு நிலை திரியும்பொழுது மொழிநிலையும்‌ திரியும்‌; இலக்கிய நிலையும்‌ திரியும்‌ என்பதற்கு அவை தக்க சான்றுகளாய்‌ அமைந்திருக்கின்றன.

18: 0 இக்கால இலக்கிய நிலை:

18 : 1 இக்‌ காலத்தில்‌ உள்ள இலக்கிய நிலைகளை எண்ணும்‌ பொழுதெல்லாம்‌ மனம்‌ நிறைவடைவதேயில்லை. இலக்கிய வாக்கத்திற்கே மிக இன்றியமையாதனவாகிய கருத்தும்‌ மொழியும்‌ அவற்றுள்‌ மிகவும்‌ தாழ்ச்சியுற்றுக்‌ கிடக்கின்றன. கண்டதே காட்சியாகவும்‌கொண்டதே கோலமாகவும்‌ இக்கால இலக்கியங்கள்‌ வடிக்கப்‌ பெறுகின்றன. கதையிலக்கியமும்‌, கட்டுரையிலக்‌கியமுமே மிகுதியும்‌ இக்காலத்தை ஆட்கொண்டுள்ளன. மக்கள்‌ மனத்தில்‌ ஆழப்‌ பதியும்‌ இலக்கியவுணர்வு, வாழ்க்கைப்‌ பாதையில்‌ தலை தெறிக்க ஓடும்‌ இக்கால மாந்தரிடை மருந்துக்கும்‌ காண முடிவதில்லை. கதைகளிலும்‌ சிறுகதையிலக்கியமே பெரிதும்‌ வரவேற்கப்‌ பெறுகின்றது. அப்பொழுதைக்கப்பொழுது சுவைத்துமிமும்‌ இலக்கியங்களே பெரிதும்‌ எழுத்துலகை ஆட்சி செய்கின்றன.

18 : 2 இக்கால மக்கள்‌ அழமாக எண்ணுவதில்லை. இலக்கியவுணர்ச்சியைப்‌ பற்றிப்‌ பெரும்பாலார்க்கு உயர்வான கருத்தில்லை. சமய விலக்கியங்களுக்கு இடைக்காலத்தில்‌ இருந்ததைப்‌ போன்ற மதிப்பு ஓரளவிருந்தாலும்‌ அவற்றைப்‌