பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



-37-

குழுவினர்‌ அந்நூல்களில்‌ உள்ள கருத்துகளை எவ்வகையாலும்‌ திருத்தவோ அடிக்கவோ செய்யாமல்‌, அவற்றின்‌ உயர்வு தாழ்வுகளை அந்நூலாசிரியர்களுக்‌கே விட்டு விட்டு, அவற்றில் உள்ள கலப்பு மொழி, சொற்பிழை, தொடர்ப்பிழை முதலிய மொழி இலக்கணப்‌ பிழைகளை மட்டும்‌ சுட்டிக்காட்டித்‌ திருத்தும்படி ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறுதல்‌ வேண்டும்‌.

20 : 4: இத்தகைய அறிவு முயற்சிக்காக நூலாசிரியரை, ஒரு நூலுக்கு இவ்வளவு என்று வரையறுக்கப்பெற்ற மிகக்‌ குறைந்த தொகையொன்றினைக்‌ கட்டணமாகவும்‌ செலுத்தச்‌ செய்யலாம்‌. இல்லெனின்‌, இலவயமாகவும்‌ ஒரு தொண்டுணர்ச்சியாகச்‌ செய்தும்‌ கொடுக்கலாம்‌. ஒரு மாவட்டத்தின்‌ எந்தஇலக்கியக்‌ கழகத்திலும்‌ தேர்வு பெற்ற - அல்லது சான்றிதழ்‌பெற்ற ஒவ்வொரு நூலுக்கும்‌, மாநிலக்‌ கழகம்‌ மதிப்புரைஅல்லது உயர்தரச்‌ சான்றிதழ்‌ அல்லது இரண்டும்‌ வழங்கலாம்‌.மாநில இலக்கியக்‌ கழகத்தின்‌ சான்றோ, மதிப்புரையோபெறாத எந்த நூலும்‌ ௮ச்சிடத்‌ தகுதியற்ற தென்றோ பள்ளி நூலகங்கள்‌, பொது நூலகங்கள்‌ முதலியவற்றில்‌ வைக்கக்‌ கூடாதன என்றோ அறிவித்து விடுதல்‌ வேண்டும்‌.

20 : 5: மேலும்‌, அவ்விலக்கியக்‌ கழகங்கள்‌ ஆங்காங்கு இலக்கிய, இலக்கண வகுப்புகள்‌ நடத்தி, அவ்வவ்‌ வட்டார எழுத்தாளர்களைப்‌ பயிற்றுவிக்கவும்‌ செய்யலாம்‌. இல்லெனின்‌ இதற்கென ஓர்‌ இலக்கியக்‌ கல்லூரியே அரசுச்‌ சார்பில்‌ நடத்தலாம்‌. எதற்கும்‌ எல்லாரும்‌ ஒருமுகப்பட்டு இணைந்து செயலாற்றினால்‌ தவிர, நம்‌ மொழியையும்‌ வளர்ச்சியுறச்‌ செய்ய முடியாது; இலக்கியத்தையும்‌ வளர்த்துவிட முடியாது.

20 : 6: எழுத்துரிமை என்னும்‌ பெயரால்‌ மொழித்‌ தரத்தைக்‌ குறைத்துத்‌ தங்கள்‌ மனம்‌ போன போக்கில்‌ எழுதிக்‌ குவிக்கும்‌ புன்மை நிலைகளை இந்த வகையிலன்றி வேறு எந்த வகையாலும்‌ தடுக்க முடியாது. மேலும்‌ இக்கால்‌