பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லைஅம்மையாம் சங்கிலி நாச்சியார் மிகவும் உள் என்பு கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இவ்வும்மையார் மலர்களைக் கொய்து மாலையாகக் கட்டி, மாதொரு பாகனாருக்குச் சூட்டி மகிழ்ந்து வந்தனர். இத்தொண்டு முட்டின்றி நடந்து வந்தது.

இவ்வாறு இத்தொண்டினைச் சங்கிலி நாச்சியார் நடத்திக் கொண்டு வருகையில், சுந்தரராம் நம்பி ஆரூரர் எழுத்தறியும் பெருமானை ஏத்தித் தொழக் திருக்கோயிலை அடைந்தனர். எம்பெருமானைப் போற்றினர். இவ்வாறு போற்றியவர் கண்ணுக்குக் கண்ணுதல் பெருமான் கருணை காரணமாகச் சங்கி லியார் காட்சி அளித்தனர். அக்காரிகையாரைக் கண்டதும் சுந்தரர் உள்ளம் அவ்வம்மையார் அழகில் ஈடுபட்டது. ஆகவே, நம்பி ஆரூரர் அவ்வம்மையா ரையும் மணந்து வாழ விரும்பினர். இவ்வாறு இவர் விரும்பியது தவறு இல்லை. நம்பியாரூரர் கமலினி. யாரையும், அனிந்திதையாரையும் மணக்கத் தானே வெள்ளியங்கிரியினின்று இம் மண்ணுலகு வந்து தோன்றி அருளினர்? இந்த முறையில் திருவாரூரில் சுந்தரர் கமலினியாராகிய பர வை நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டனர். அதற்கடுத்த முறைப்படி அனிந்திதையாகிய சங்கிலி நாச்சி யாரைத் திரு ஒற்றியூரில் காண நேர்ந்து, அவ்வம் மையாரையும் தமக்குத் திருமணம் செய்து வைக்க ஒற்றி யீசனை வேண்டி நின்றார். இறைவரும் முன் இனய் விதியின் காரணத்தினை முன்னிட்டு ஒற்றியூர் அன்பர்களைக் கொண்டு திருமணத்தை முடித்து

ஈடுபட்ட இந்து வாழ ஆ. நம்பியாகத் தானே