பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்புறும் 1.1$ணியில் ஈடுபட்டிருந்தனர். இம்முறை #9ல், சிற்சில திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்தவர், திருவாரூரை அடைந்தனர். திருவாரூர்த் திய.ait (கேசளைக் கண்டு இன்புற்றனர். இங்ஙனம் இன் புற்ற நம்பி ஆரூரர் முன்னைய ஊழ்காரணமாகத் தியாகேசப் பெருமானைத் தினமும் வழிபடும் முறை wயில் ஆலயத்திற்கு வந்த பரவையாரைக் கண் எறுற்று, அவரை மணக்க விரும்பினர். அவ்விருப் பம் தியாகேசர் திருவருளால் இனிது முடிந்தது. நம்பி ஆரூரர் நங்கை பரவையாருடன் இல்லறத்தை ஏற்று இன்புடன் வாழ்ந்து வரலானார். இங்ஙனம் நாட்கள் பல கழிந்தன. முன்பே நம்பியாரூரர் இறைவன் எழுந்தருளிய திருத்தலங்களைத் தாம் நேரில் கண்டு இன்புறும் தொண்டை மேற் கொண்டவர் என்பதைக் குறிப்பிட்டோம். அந்த முறைமைக்கு முரணாகாது, தம்பிரான் தோழராம் சுந்தரர் தமது தலயாத்திரையை மேற்கொண்டு (சோழ நாட்டிலுள்ள திருத்தலங்கள் பலவற்றையும் கண்டு கைகூப்பித் தொழுது, தொண்டை நாட்டை அடைந்தனர்.

தொண்டை நாட்டில் சிறப்புடன் விளங்கும் திருத் தலங்களுள் திரு ஒற்றியூரும் ஒன்று. அத் தலத்தில் உள்ள பெருமான் திருப் பெயர் எழுத் தறியும் பெருமான் என்பது. இது கடற்கரை ஓரத்தில் உள்ள திருப்பதி, அதனால்தான், “'தண் க.-ல் ஓதம் (அலை) வந்துலவும் ஒற்றியூர்” என்று

தப்பெறும் சிறப்பினைப் பெற்றுளது. இத்தலத் கில்தான் திருக்கையிலையினின்று வந்த அனிந்திதை