பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் விடுத்த தூதன்

109

அவன் ஏவக் கருதிய பணி இன்னதென அறியாத நளன் அத் தொழிலைச் செய்தற்கு இசைந்தான்.

நளனது உள்ளமும் இந்திரன் மந்திரமும்

இவ்வாறு நளனது இசைவைப்பெற்ற இந்திரன், “வேந்தே! தமயந்தி தன் சுயம்வர மாலையினை எங்களில் ஒருவர்க்குச் சூட்ட வேண்டுமென்று அவள்பால் தூது சென்று ஓதி வருக!” என்று வேண்டினான். இச் செய்தியைக் கேட்ட நளனது உள்ளம் தடுமாறியது; பாவினிடத்தே நூலைச் செலுத்தும் குழலைப் போல, அஃது அங்கும் இங்கும் திரிந்து தள்ளாடியது. அவன் தனது உள்ளத்தெழுந்த காதல் வெள்ளத்தை அடக்கிக் கொண்டான். இந்திரனை நோக்கி, “தேவர் கோனே! நீ ஏவிய பணியினைப் புரிய இசைந்து நின்றேன் ; காவலைக் கடந்து கன்னி மாடத்துள் புகுவது எங்ஙனம்?” என்று வினவினான். இந்திரன் அவனுக்கு மந்திரம் ஒன்றைக் கற்றுக் கொடுத்து, “இதனை நீ உச்சரித்துக் கொண்டு சென்றால் எவரும் உன்னைக் காணமாட்டார் ; நீ கன்னிமாடத்தில் புகுந்து தமயந்தியை எளிதிற் கண்டு வரலாம்” என்று கூறி, நளனை நகருள் அனுப்பினான்.

கன்னிமாடத்தில் தமயந்தியைக் காண்டல்

இந்திரன் விடுத்த தூதனாய்த் தமயந்தியின் கன்னி மாடம் புகுந்த மன்னனாகிய நளன் ஆங்கிருந்த அப் பெண்ணரசியைக் கண்ணுற்றான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நோக்கிய பொழுது கருங்குவளை மலரில் செந்தாமரை மலர் பூத்தது போன்றும், செந்தாமரை மலரில் கருங்குவளை மலர் பூத்தது போன்றும் விளங்கியது. தமயந்தியின் வேட்கை நிறைந்த உள்ள