பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

இலக்கியத் தூதர்கள்

இனி அதியமான் நமக்கு அஞ்சி அடிபணிவான் என்று தவறாகக் கருதினான். ஒளவையாரோ அவனது அறியாமைக்கு இரங்கினார். அதியமான் அனுப்பிய தூதராக வந்த அம்மூதாட்டியார் தம் கடமையைச் செவ்வனே தவறாது செய்துவிட்டார்.

வஞ்சப் புகழ்ச்சி

அவர் தொண்டைமான் முன்னர்ப் பாடிய பாடல் வஞ்சப் புகழ்ச்சியாக அமைந்தது. அது தொண்டைமான் படைக்கலப் பெருக்கைப் பாராட்டுவது போலத் தோன்றினாலும் பழிப்புரையே. அதியமான் படைக் கலங்களை இகழ்ந்துரைப்பது போல இருந்தாலும் புகழ்ந்துரைக்கும் பொன் மொழியாகவே அப்பாடல் அமைந்தது. தொண்டைமான் படைக்கலங்கள் என்றும் போரிற் பயன்படுத்தப்படாதவை; காவற் கூடத்தை விட்டு ஒரு நாளும் அகலாதவை ; போர்க் களத்தையே கண்டறியாதவை; அதனால் அவை என்றும் கூர்மை மழுங்காது அழகுடன் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன என்று புலப்படுத்தி, அவனது ஆண்மையை நயமாக எள்ளி நகையாடிய ஒளவையாரின் நாவன்மையை என்னென்பது !

ஒளவையார் தலைத்தூதர்

இவ்வாறு தொண்டைமான் படைக்கலத்தைப் பழித்துரைத்த பைந்தமிழ் மூதாட்டியார் அதியமான் படையாற்றலைப் பாராட்டாதிருக்கவும் இல்லை. அத்தொண்டைமான் எதிரிலேயே அதியமான் படைக்கலங்கள் அடியும் நுனியும் சிதைந்து