பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதியமான் அனுப்பிய தூதர்

41

அதனைக் கண்ட ஒளவையார், “அரசே! இங்குள்ள வேற்படையெல்லாம் எத்துணை அழகுடனும் ஒளியுடனும் விளங்குகின்றன! பீலியும் மாலையும் சூட்டப் பெற்றும், திரண்ட காம்பு திருத்தப் பெற்றும், நெய் பூசப்பெற்றும் ஒளியுடன் திகழ்கின்றன. இவையெல்லாம் காவலையுடைய கோவிலின் கண் அழகாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியமானுடைய வேற்படைகளோ காவல் மனையில் வைக்கப்படவில்லை. அவையெல்லாம் பகைவரைக் குத்திக் குத்திக் கங்கும் நுனியும் முறிந்து சிதைந்தவை. அவை செப்பனிடுதற்காகக் கொல்லன் உலைக் களமாகிய சிறிய கொட்டிலில் எந்நாளும் கிடக்கும்” என்று கூறித் தொண்டைமானை இகழ்ந்து நோக்கினார்.

‘இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண் திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடு துதி சிதைந்து
கொற்றுறைக் குற்றிலம் மாதோ என்றும்
உண்டாயின் பதங்கொடுத்
தில்லாயின் உடனுண்னும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணலெங் கோமான் வைந்துதி வேலே’

என்ற அரிய பாடலைப் பாடினார்.

தூதரின் காலம்

அது கேட்ட தொண்டைமான் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. நம் கருத்தையும் படைப் பெருக்கயுைம் ஒளவையார் நன்றாகத் தெரிந்து கொண்டார்;

இ.தூ.-4