பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமன் விடுத்த தூதன்

71

நோக்கி, “நீ யாவன்? இங்கு வந்த காரணம் யாது? உன்னை இவண் அனுப்பியவர் யார்?” என்று வினவினான்.

அனுமன் அறிவுரை

அமரர் புகழையெல்லாம் வேருடன் விழுங்கிய இராவணன், அனுமனை நோக்கி இவ்வாறு வினவியதும் அவனுக்குப் பல அறிவுரைகளை வழங்கினான். “உனது எல்லையற்ற வரம் முதலியவற்றைத் தனது நீட்டிய பகழியொன்றால் முதலொடு நீக்க நின்றவனாகிய இராமன் விடுத்த தூதன் யான்; அனுமன் என்பது எனது பெயர்; சீதாபிராட்டியைத் தேடி நான்கு திசைகளிலும் வானர வீரர் சென்றுள்ளனர்; தென்பால் வந்த கூட்டத்திற்கு வாலியின் மகனை அங்கதன் தலைவனாவன் ; நான் அவனது ஏவலால் இங்குத் தனியே வந்தேன்” என்று கூறினான்.

இராவணன் வினாவும் அனுமன் விடையும்

அதுகேட்ட இராவணன் தன் பற்கள் வெளியே தெரியுமாறு நகைத்தான். “வாலியின் மகனால் அனுப்பப்பட்ட தூதனே பேராற்றல் படைத்தவனாகிய வாலி நலமோ? அவனது அரசாட்சி நன்கு நடைபெறுகின்றதோ ?” என்று கேட்டான். இராவணன் வினாக்களைக் கேட்ட அனுமன் தானும் நகைத்தான். அரக்கனே! அஞ்சற்க: வாலி இறந்துபோனான் அவனது வாலும் அன்றே போய்விட்டது; அவன் இராமபிரானுடைய கணையொன்றினாலே இறந்துபோனன் ; இப்போது சுக்கிரீவன்தான் எங்கள் அரசன் ; அவன் இராமபிரானுக்கு இனிய நண்பனானான்; அப்பெருமான் தனது கணையொன்றினால் வாலியைக் கொன்று