பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டவர் விடுத்த தூதன்

79

யடைந்தான். புறநகரில் அமைந்ததொரு பொழிலில் தங்கினான். அவனது வருகையைத் தூதர் துரியோதனனுக்கு அறிவித்தனர். துரியோதனன் நகரை அணி செய்யுமாறு கட்டளையிட்டுக் கண்ணனை எதிர் கொள்ளப் புறப்பட்டான். அவன் மாமனாகிய சகுனியோ, தன் மருகனைத் தடுத்து நிறுத்தினான். ஆதலின் துரியோதனன் கண்ணனை எதிர்கொள்ளாது, அவனுக்கு இருக்கை யமைத்துத் தம்பியர் புடைசூழ வீற்றிருந்தான்.

விதுரன் மாளிகையில் விருந்து

புறநகரில் வந்து தங்கிய கண்ணனை வீடுமன், விதுரன், துரோணன், அசுவத்தாமன் முதலிய பலர் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர்களுடன் நகருள் நுழைந்த கண்ணன் எல்லோரையும் அனுப்பிவிட்டு, விதுரன் மாளிகையில் விருப்புடன் புகுந்து தங்கினான். தனது மாளிகையில் தங்கிய கண்ணனை விதுரன் பலவாறு போற்றி வழிபட்டான். “பெருமானே! எளியேனது இச்சிறிய குடிசை என்ன அரிய தவத்தைச் செய்ததோ ? நீ முன்பு அறிதுயில் புரிந்தருளிய பாற்கடலோ இது! அன்றி ஆதிசேடனாகிய பாம்புப் பாயலோ! பச்சை ஆலிலையோ? அல்லது நால்வகை வேதங்களோ ? நீ இங்கு எழுந்தருளியதை என்னென்று போற்றுவேன்?” என்று பாராட்டி மகிழ்ந்தான்.

“முன்ன மேதுயின் றருளிய முதுபயோ ததியோ?
பன்ன காதிபப் பாயலோ? பச்சை ஆல் இலையோ?
சொன்ன நால்வகைச் சுருதியோ? கருதி எய்தற்
கென்ன மாதவம் செய்ததுஇச் சிறுகுடில்! என்றான்.”

பின்பு கண்ணபிரானுக்கும் உடன் வந்தவர்க்கும்