பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள் மீது அளவற்ற பாசம் உடையவர் அப்பா. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எங்களை எந்த வீட்டுக்கும் அனுப்ப மாட்டார். தன்னுடைய பார்வையிலேயே நாங்கள் எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார். யாருக்காவது சிறிது அடிபட்டால் கூட மிகவும் துடித்துப் போவார் அப்பா. . - ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக எண்ணெய்க் குளியல் தவற மாட்டார். உடனே பிளேடால் நகம் வெட்டிக் கொள்ள வேண்டும். இரவில் அதிகமாகத் தூங்க மாட்டார். பகல் உணவுக்குப் பிறகு சிறு தூக்கம் போடுவார். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கி விடுவார். ஆறு மணிக்கு மீண்டும் படுத்து ஒரு மணி நேரம் உறங்குவார். காலையில் அவருக்கு மட்டும் ஹோட்டலிலிருந்து காபி வாங்கித் தருவோம். ஒன்பது மணியானால் இரண்டு சுருட்டுகள். ஒரு பொடி டப்பா. அப்புறம் கடிதங்கள் எழுத, இன்லேண்ட் லெட்டர்கள். பதினோரு மணிக்கு ஒரு டீ. மறுபடியும் மாலை நான்கு மணியளவில் ஒரு டீ வேண்டும். சினிமாவிலிருந்து மீண்டு வந்து பத்திரிகைத் துறையில், சாவி யின் காலத்தில் தினமணி கதிருக்கு வந்தார். அப்போதுதான் 'எம்.கே. தியாகராஜ பாகவதர் வரலாறு', எம்.ஆர். ராதாவின் சிறைச் சாலைச் சிந்தனைகள் போன்றவை வெளியாயின. மகாபாரதக் கதையைப் பாட்டினில் பாரதம் என்று தினமணியில் எழுதிய போது ஆசிரியர் ஏ.என். சிவராமன் அழைத்துப் பாராட்டியதுண்டு. - எழுதாத கதைக்குப் பணம் பெற்ற நிகழ்வும் உண்டு. ஒரு சமயம் 'கல்கி அதிபர் சதாசிவம், அப்பாவை அழைத்து ஒரு தொடர் எழுதச் சொல்லித் தலைப்பு என்ன என்று கேட்டார். ‘வாழ்க்கை ஒரு விளையாட்டு’ என்று அப்பா தலைப்பைச் சொன்னவுடன், 'பேஷ் பேஷ்! நன்னா இருக்கு என்று பாராட்டி உடனே இரண்டாயிரம் ரூபாய் பணமும் தந்தாராம் சதாசிவம். ஆனால், அந்தக் கதை பல காரணங்களால் எழுதப் படவே இல்லை என்பது தனிக்கதை. சந்திப்பு: சுப்ர. LITಖಪೆ 12 е இலக்கியப்பீடம் - அக்டோபர் 2OO5