பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நீ என்ன அவருக்க டப்பிங் வாய்ஸ்ா? அவர் பதில் சொல்ல . அவருககு அ மாட்டாரோ!' டிப்ளமா படிக்கிற மாணவனுக்குத் தருகிற மரியாதையாக அது இருக்காது. அவர், இவர் என்று அழைப்பதெல்லாம் கூட அவன், இவன் என்பதற்குச் சமமாகத்தான் இருக்கும். தனது குறை, தனது பலவீனம் வகுப்பில் எண்பத்து மூன்று பேருக்கும் தெரிந்து விட்டதே என்ற உறுத்தலில் இருந்தான் கேசவன். 'கேட்கறேன்ல. ஏன் தூங்கினே? தொண்டைத் தண்ணி போக கரடியா கத்தறேனே' - பதிலாக எதைச் சொல்வது என்று தெரியவில்லை. என்ன காரணம் சொன்னால் தப்பி விட முடியும் என்று கேசவனுக்குத் தெரியவில்லை. நல்லவிதமாக கணக்கு நடத்திக் கொண்டு வரும்போதே திட்டுகிறவர் குறுக்கே பதில் சொன்னால் என்னகத்து கத்துவாரோ என்ற பயக்கோழி தலை தூக்கிக் கொத்தியது. ズ கேசவனுக்கு எப்போதும் போலவே தலை நிமிர்ந்து பார்த்து, கண்ணோடு கண் நோக்கிப் பார்க்கிற தைரியமும் பழக்கமும் இப்போது கை விட்டிது. நிமிராமலே இருந்தான். . 'பொட்டையனாடா நீ?நிமிர மாட்டியா?” இந்தக் கேள்வி கேசவனை நோக்கி விசப்பட்டபோது கேர்ள்ஸ் சைடிலிருந்து சிறிய சிரிப்பலை புறப்பட்டு ஆண்கள்பக்கம் நகர்ந்து இரண்டு மடங்கானது. சிறிய வேதனை பெரிசாகி விட்டது. குவார்ட்ரேடிங் ஈக்குவேஷன் இனி புரிந்தாலும் போடவே கூடாது என்ற வெறுப்புணர்வு ஒருபுறம் தோன்றியது. தனது சுபாவம் மிகப் பலராலும் தாக்கப்படுகிறது; கவனிக்கப்படுகிறது என்ற உணர்வு கேசவனுக்கு இன்னும் கூச்ச உணர்வைத் தந்தது. தலை இன்னும் தாழ்ந்தது. லெக்சரர் டேவிட் மிச்சமிருந்த முழு சாக்பிஸையும் கேசவ் மீதே எறிந்து விட்டுப் போனார். - வகுப்பை விட்டு இருவரும் சைக்கிளில் மெல்ல ஒட்டியபடி வெளி வந்தார்கள். . எதிரே குல்மோஹர் மரநிழல் சிவப்புப் பூக்களின் கொத்துகளை தீயினால் எழுதிய மலர்க் கவிதை போல பச்சை இலைகள் நடுவே இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 19