பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்பரப்பில் மிதந்து செல்லும் பூ பார்ப்பதற்கு இலகுவாக மிதந்து செல்வது போல தோன்றுகிறது. அப்பூவின் இதழோ நீர்ப் பரப்பின் விசையினால் உராய்வு பெறுவது கண்ணிற்குத் தெரியுமா என்ன? வாழ்வின் நிகழ்ச்சிகளில் விடுதலைப் போராட்டத்திற்காக நாடு அடைந்த அழுத்தம் எவ்வளவோ அதே அள்வு சாதாரண மாற்றத்திற்கும் தேவைப்படுகிறது என்பது ஒரு பேருண்மை. வெளித்தோற்றத்தில் வேண்டுமானால் சம்பவங்கள் அடுத் தடுத்து நகர்ந்து கொண்டே செல்வதுபோல காட்சியளிக்கலாம். சிவானியின் வீட்டில் இப்போது நிகழும் மாற்றங்களுக்குப் பின்தளத்தில் பணத்தேவை எனும் அழுத்தம் உந்தித் தள்ளுவதை கேசவன் புரிந்து கொண்டான். - - - 'கசக்கறது” என்றான் திடீரென்று. ‘'எது?” 'காபியைச் சொன்னேன்’’ என்று சமாளித்தான் கேசவன். 'சர்க்கரை கொண்டு வரட்டுமா?’ என்ற சிவானியின் அம்மாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வழக்கம்போல இரு கண்களும் தாழ்ந்தன. 'எல்லாச் சர்க்கரையும் அம்மா உடம்பிலேயே இருக்கு' என்றாள் சிவானி. உடல்நலம் பாதித்த அம்மாவின் அருகில் நிற்கும் அவள் முகத்தில் கவலை பரிபூரணமாக ஒட்டிக் கொண்டிருந்தது. முதிர் கன்னிப் பருவம் படகுத் துடுப்பில் தெளிக்கும் நீராக ஒருபுறம் தெறித்துக் கொண்டிருக்க, உள்ளமோ... குடும்பப் பொறுப்பு எனும் சங்கிலியைத் தாலியாக்கிக் கொண்டிருந்தது. அவளைப் பொருத்தவரை அந்த முகத்தில் குடும்ப பாரம் எனும் மைய நோக்கு விசையே அவளைச் செலுத்தியது. கேசவன்தான் விட்டில் பூச்சி போல ஆசை இறக்கையுடன், அவள்மீது மோதி மோதி விழுந்தான். வெளிச்சத்தில் விழலாம் - அது அறிவு; இருட்டில் விழலாம் - அது அஞ்ஞானம். கேசவனோ நெருப்பில் அல்லவா விழுகிறான்! 24 е இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005