பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்கு அவர் சொன்னார், ஒரு காலத்தில் நோபல் பரிசு பெயரே அழிந்துவிடும். ஆனால் ஜெயகாந்தன் பெயர் என்றும் நிலைத்திருக் கும் என்றார். நானும் அதையே கூறுகிறேன். என்னையும் ஜெயகாந்தனையும் தவிர மிகவும் தரமான எழுத்தாளர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. உலகத் தரத்தில் பார்த்தால் டால்ஸ்டாயை எங்களோடு இணைத்துக் கொள்ளலாம். உலக இலக்கியத்தை உற்றுப் பார்த்தால் தமிழும், தமிழனும் எழுதி வைத்தது, "தடங்கலுக்கு வருந்துகிறோம்' மட்டும்தானா? உலகத்திலேயே அற்புதமான கவிஞர் யார் என்றால் நம் கம்பனைக் கூறலாம். எனவே, இந்தக் கேள்வி இனி தேவையற்றது. வாருவது, வசை பாடுவது - இன்னும்கூட தமிழனின் தேசிய குணம் மாறவில்லையே? - இந்தக் கேள்வியை நான் முற்றிலும் மறுக்கிறேன். தீயவற்றை எதிர்ப்பதில் தமிழனின் கோபம் மிக அருமையாக இருக்கும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்டத்தையே எதிர்த்து கைதானவன் நான். அதே நேரத்தில் இந்தி கவிஞர் ஜெய்சங்கர் பிரசாத் எழுதிய 'காமாயநீ என்ற குறுங்காவியத்தை இந்திய மொழிகள் எதிலும், அத்தகைய படைப்பு இல்லையெனக் கருதுகிறேன். ஒரு பெரிய இயக்கச் சார்பு இருந்தும் உங்களால் ஏன் தொடர்ந்து இயங்க முடியவில்லை? - - நான் ஒரு விமர்சகன் என்பதோடுதான் எங்கேயும் இருந்திருக் கிறேன். ஜனங்களைப் பற்றி சிந்திப்பவனும், சமூகத்தை முன்னிறுத்தி எழுதுபவனும் என்றும் தொடர்ச்சியானவன். இந்த நிலையில்தான் எப்போதும் நானிருக்க விரும்புகிறேன். விதிகளற்ற உங்கள் இலக்கிய வாழ்க்கையின் இப்போதைய நிலையென்ன? - எப்போதும் என் நிலை ஒரே நிலைதான். சென்ற கேள்வியின் பதிலிலேயே இதைச் சொல்லி விட்டேன். உங்கள் பதிவுகளெல்லாம் பிரமாதப்படுத்தி இருக்கின்றன. இருந்தும் அத்தனை சீக்கிரம் ஏன் சமாதானம் அடைந் தீர்கள்? சமாதானம் அடைந்ததாகச் சொல்வது தவறு. எதற்காகவும், எப்போதும் சமாதானம் அடையாததுதான் மகாகவிகளின் மனோ 48 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005