பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெயிலில் உலவும் நிலவு சாலை சந்திப்பு சிவப்பு கண்டு பொருமி நின்ற வரிசைகள் வெப்பத் தாரை வெட்கித் தலைகுனிய வைத்த வெண் மலர்ப் பாதங்கள் அக்கம் பக்கம் மேயும் சில அவதாரக் கண் விழிகள் கண்ணாடி துடைக்கும் மஞ்சள் துணி அடுக்கு 'கருகும் முன் : காருக்குள் தொங்க விடேன் கண் கலங்கும் ஊஞ்சல்கள்... கையில் ஏந்திய கறுப்பு நிறக் காரிகை. இடைவெளி வழி விட இங்கும் அங்கும் கூவுகிறாள்... ஒரத்துக் கடையின் ஒரடி நிழலில் ஒடுக்கிக் கொண்டு அவள் கணவன் கையில் ஒரு நோஞ்சான் பையக் குரல் கொடுக்க குலை பதறி வந்தவள் குறு வயிறு நிரப்பினாள். வரிசைகள் இடம் பெயர முடமான கணவன் முனகினான் லேசாக... வியர்வை ஒட்ட வைத்த, ரவிக்கையை விரல் தொட்டு இழுக்க வழி விட்ட ஓட்டையில் வெளிக்காட்டிய வெள்ளை. சரியும் துணி கொண்டு மறைக்காத மங்கை கருமமே கண்ணாயினாள். குளிர் தடுத்த கண்ணாடியைக் கொஞ்சம் இறக்கி வாசனைக் குளிரை வெளியே அனுப்பியவன் கொள்ளி விழிகளைக் குத்தீட்டியாய்ப் பாய விட்டான். 'மஞ்சள் துணிக்கு பத்து ரூபாய் சரிதான் - உன் - மஞ்சள் உடம்புக்கு என்ன விலை? கூசாத வாய் குடித்த மதுவினால் குளறிக் கொட்டியது. 'கூடப் பொறந்தவகிட்ட போய்க் கேளுப்பா உடம்பை விற்காத உழைப்பாளி பச்சை கண்டு பின் வாங்க மிதிவண்டி ஒன்றின் கொதிகலச் சொற்கள் வெடித்தன. கவிஞர் சுடர் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 93