பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104


மிக முற்காலத்தில் கடவுட் படிமங்களுக்குத் தனிமலர்களைத் தொகுப்பாக அள்ளிப் படைக்கும் முறையே வழிபாட்டு முறையாக இருந்தது. தனிப் பூக்களைத் தூவிப் போற்றி செய்யும் அருச்சனை முறை ஆரியரால் நடந்தது. மாந்தம் தாம் படைத்த கடவுளர் திருவுருவங்களைத்தம்மைப்போன்றே ஒப்பனைசெய்துமகிழ்ந்தனர். கடவுளரைப் பூசிப்பது பூசனை-பூசை எனப்படும். இப்பூசை 'பூ செய்’ என்பதன் மரூஉ மொழி, பூவால் செய்யப்படும் வழிபாடு 'பூசெய்’ எனப்பட்டது. நன்செய், புன்செய்-நஞ்செய் புஞ்செய் ஆகி-நஞ்சை புஞ்சை ஆனதுபோன்று பூசெய், பூசை ஆகி அன் சாரியை பெற்றுப் பூசனை ஆயிற்று. நீங்கள் சொல்லிக்கொள் வது போன்று இது 'பூஜை அன்று. வடநாட்டு அறிஞர் சாட்டர்சி என்பார், "பூஜ்’ என்னும் வேர்ச்சோல் கொண்டதாகக் கருதப் படும் பூசை என்னும் சொல் திராவிட மொழியின் வழி கொண்டது. இச்சொல்லோ அதன் வேரோ ஆரிய மொழியிலோ அயல்நாட்டு ஐரோப்பிய மொழிகளிலோ காணப்படவில்லை” 68 - ་བ།- བ་ལ་བ་ - -என எழுதியுள்ள கருத்தும் எனது இயற் பெயரின் வழியே பூசனை வளர்ந்தது என்பதற்குக் துணை யாகின்றது. சப்பான் நாட்டவர் ஒவியங்களின் முன் மலர்களைக் குவிய லாகப் படைக்கும் பழக்கம் உண்டு. இப்பழக்கம் இந்தியாவிலிருந்து சீனா வழியாகச் சப்பானுக்கு வந்ததாக அந்நாட்டு ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர். நம் நாட்டில் அம்முறை, மாறி வேற்றார் முறை ஆட்சி செலுத்துகின்றது. அங்கு, ஒப்பனை, பேரழகைக் கூட்டும் சுவையாக வளர்ந்துள்ளது. தனி மலர் இருக்க நான் மாலையாகும் திறத்தைத் தமிழ்ச் சொற்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன: 1. தலையிற் சூட்டிக்கொள்வது ...கண்ணி இதற்கு என்னை இரண்டிரண்டாக இடையிட்டுத் தொடுப்பர். கண்ணி ஆடவர்க்கு உரியது. 16盏 蠶 movements and Prehistoric Culture in the Vedic age - Page 160. * -- . . . ~~...~ * ~ *