பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


இதழ் என்பது பொதுப்பெயர் என்றாலும் சிறப்பாக மெல்லியல்புடையதைக் குறிக்கும். பெரும்பான்மையானவற்றில் புல்லியும் அல்வியும் இதழ் எனப்படும். அதழ் என்பது உள்ளீடாகச் சுருங்கியிருந்து விரிவது. “ஞெலிபுடன் திரைத்த ஞெகிழ் அதழ்க் கோடலும்' , ' -என்றும் 'பூங்கொடி அவரைப் பொய் அதழ்'200 -என்றும் காந்தள் அவரை மலர்களின் இதழ் அதழ்’ எனப்பட்டன. அத்தியின் உள்ளி தழையும் அதழ்’ எனலாம். தோடு இதழைவிடச் சற்றுத் தடிப்பானது. ஆனால், மென்மை குறையாதது. கொன்றை போன்றவற்றைக் கொள்ளலாம். "தோடு எறும் மலர்க்கொன்றை' என்பது தேவாரம். ஏடு, தோட்டைவிடச் சற்றுத் தடிப்பானது. மடல், நீட்சியும் மடிப்பு அமைப்பும் கொண்டது. நடுவில் ஈர்க்குள்ளது. "மடல் பெரிது தாழை'20.2 என்பதால் உணரலாம். இம்மடல் முடங்கல் எழுதப் பயன்பட்டது. தளம் தட்டையானது. வளப்பமானது. இது புற இதழ். "தள வள முகைகொள்'203 எனச் சீவக சிந்தாமணி காட்டு கின்றது. பாளை மிகத் தடிப்பானது. மென்மை என்று சொல்ல இயலாதது. பூங்கொத்துகளை மூடியிருப்பது. தென்னையின் பாளை அறிவிர். இவ்வாறு ஒருறுப்பே இத்துணை வகைப் பெயர்களைத் தன் தன்மைகளால் பெற்றுள்ளது. - இவ்வாறு அறிமுகம் பெறும் தாழையைத் தொடர்ந்து புதிராக அறிமுகம் பெற்றுள்ளதாக அடுத்து சிறுவாய்ப் பாடலில் அமைந்துள்ள பூ அத்திப் 是由· 199 கலி ; 101: 4 202 வாக்குண்டாம் : 1.2 200、108:8、 208 சீவு. சி 751 201 அப். தே. திருநல்லூர் . 8 . . . . -