பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


இந்த முல்-முள் என வளரும். இவ்வளர்ச்சியால் கூர்ம்ை என்னும் பொருளை ஏற்கும். இவ்வாறு திருகுதல், கூர்ம்ை இரண்டன் பொருளமைப்பில் ஐ விகுதி பெற்று முல்லை என்னும் சொல் உருப்பெற்றது. இவ் வகையில் முல்லை மலர் இச் சொல்லுக்கு உரியதாகியது. முல்லை மலரின் அரும்பு, முனையில் இதழ்கள் கூடியுள்ளமைமுறுக்கியதாய்த் தோன்றும். முறுக்குதல், புரிதல், கிரிதல், சுரிதல் ஒரு பொருட் சொற்கள். முல்லை அரும்பின் முனை கூர்மையானது, துளசிக்கு வாசமும் முல்லைக்குக் கூர்மையும் முளைக்கும் போதே தெரியும் ' என்ற நாட்டு வழக் கிலும் கூர்மை குறிக்கப்படும். இது 'முல்லை வை (கூர்மை) துனை ' " எனப்பட்டது. "புரி நெகிழ் முல்லை” எனப்பட்டது. இவ்வாறு கூர்மையும் புரிவும் கொண்ட அமைப்பில் இம்மலருக்கு முல்லை. என்னும் சொல் அமைந்தது. இக் கூர்மை “பூனைக் குட்டியின் பல்லைப் போன்றது'8 என உவமை காட்டப்பட்டது. சொல் கிளைப்பதில் முல் - முர் - முரு - முருகு என்பது ஒரு வளர்ச்சி. இவ்வளர்ச்சியில் 'முருகு மணப் பொருள் பெறும், மணத்திற் சிறந்தது முல்லை. மணத்தில் பிற மலர்கள் யாவும் இதற்குப் பின்னர் நிற்பவை. எனவே, 'முல் வளர்ச்சியில் தோன்றிய 'முருகு' என்னும் மணச்சொல்லும் இதன் தொடர்பைக் கொண்டதாகும். இவ்வாறாகச் சொல் வரலாற்றில், முனை கூர்மை கொண்டது: முனை முறுக்கிப் புரிவுள்ளது: மணம் கொண்டது -எனும் பொருளுக்கு இலக்காகி முல்லை மலர்கிறது; மணக்கிறது. . முல்லையினது. இக் கூர்மையை மிக நுணுக்கமாகக் கண்டு பேராசிரியர் விளக்கியுள்ளார். மேலே கண்ட வை துணை' என்னும் அகநானூற்றுத் தொடர்க்கு விளக்கந்தரும் அவர், 1 அகம் : 4 : 1. 2 கவி : 61 : 2 8 பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையும் - பாசிலை முல்லை முகைக்கும் புறம் 117 8, .ே