பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


புலியைக் கொன்று அதன் பல்லைத் தன் வீரச் சின்னமாகக் கொணர்ந்தான். அதில் நெஞ்சைப் பறி கொடுத்த குமரிக்கு அப் பல்லையே வாழ்வுச் சின்னமாக அணிவித்தான். அவன் ಹ67Tur ஆனான்; அவள் மனைவி ஆனாள். அம் முல்லை நில விரன் சூட்டிய சின்னந்தான் இன்றும் தாலி உருவில் நம்மிடையே உள்ளது. அந்த முல்லை நிலத்தின் தனிப்பெருஞ் சின்னம் முல்லைப்பூ இது தமிழர் வாழ்வியல் பூ. முல்லை, தமிழரின் வாழ்வியற் பூ என் பதைப் பல முனையிலும் காண வேண்டும். அதற்கு முன் முல்லைப் பூவின் சொல் வரலாறு காணத்தக்கது. சொல்லில் முல்லை முல்லை என்னும் சொல்லை ஒரு சொற்குடும்பத்தில் மணம் கமழும் பிள்ளை எனலாம். இது பிறந்த குடும்பம் குறிக்கத்தக்க அருஞ்சொற்களைப் பெற்றுத் தந்த குடும்பம். உலகத்தில் உயிர்களை ஆறு குலங்களாக வகுத்தார் தொல் காப்பியர். உலகத்து மொழிகளை மூன்று குலங்களாகக் கண்டார் மாக்சுமுல்லர். ஒவ்வொரு உயிர்க்குலமும் பற்பல இனப்பிரிவுகளைக் கொண்டது. இதுபோன்று ஒவ்வொரு மொழிக்குலமும் பல்வகை இனப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. உயிரின் ஒவ்வொருஇனத் திலும் குடும்பப்பிரிவுகள் உள. மொழியிலும் குடும்பங்கள் உள்ளன. தமிழ் மொழியில் உள்ள வேர்ச்சொல் ஒவ்வொன்றிலிருந்தும் முளைத்தும் கிளைத்தும் தழைத்தும் சொற்குடும்பங்கள் பெருகி புள்ளன். அவற்றுள்'முல்லை என்னும் சொல் ஒருமூலக்குடும்பத்தில் முளைத்துக் கிளைத்தது. - ல் சுட்டெழுத்துக்களின் அடியாக உண்டானவேர்ச் சொற்களில் ‘உல் என்பது ஒன்று. உல் - குல், சுல், துல், நூல், புல், முல் முத்லியமுதனிலைகட்குமூலமாகும். இவற்றுள் 'முல்'என்பது உல், என்பதன் பொருள் வளர்ச்சியாகிய உலவுதல், சுற்று, திருகு முதலிய ப்ெர்ருள்கள்ல் அமையும். - -

  • జా: - : . :

இவ்வகையில் 'முல் என்பதற்கு உலவும் அமைப்பு, சுற்றும் அமைப்பு, திருகிய அமைப்பு என்னும் பொருள்கள் அமையும்.