பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
156


கார் நயந்து எய்தும் முல்லை' -என்று காரையும், . 'முல்லை . அரும்புவாய் அவிழும்பெரும் புன் மாலை' என மாலையை யும் இலக்கியங்கள் சொல்லிக் காட்டும். முல்லைபூப்பதைப் புன்முறுவலாகவும், நகைப்பாகவும், சிரிப் பாகவும் வழங்குவர். பூக்களுக்கு ஏற்ற தன்மைகளை அடைமொழி யாக்கிக் கூறுவது உண்டு. அவ்வாறு சில மலர்களை அடை மொழி கொடுத்துப் பொருநராற்றுப்படை என்னும் நூல் 'வறள் கடம்பு’’ 'இவர் பகன்றை” "தளிர் புன்கு” "தாழ் காவி' 'நனை ஞாழல்’ 'அவிழ் தனவு’’ "அகன் தோன்றி' என்றெல்லாம் கூறிவருவது முல்லையை "நகு முல்லை' - என்று புன்முறுவலுக்கு உரியதாக நகை கூறியது. அதன் மலர்ச்சி நகுதல் - நகைத்தல் - சிரித்தல். இச் சிரிப்பை முல்லை தன் தாயாம் கொடியிலும் காட்டும்; காலத்திலும் காட்டும். 'கொடி முல்லை எயிறு ஈன' (ஐந்தினை எழுபது : 21) 'முல்லை இலங்கு எயிறு ஈன நறுந்தண்கார் மெல்ல இனிய நகும்". (கார் நாற்பது 14) - கொடி பல்போன்று புன்முறுவலை ஈன, கார்காலம் மெல்ல இனிய நகுமாம். இக்காட்சி காதலர்க்குக் கிளர்ச்சியையும் காண் போர்க்கு மகிழ்ச்சியையும் தரும். பாவேந்தர் மாலைப்பொழுதில் உலா வருகின்றார். கமழும் மெல்லிய மனத்தோடு தென்றல் வந்தது. வந்த திக்கிலே நடந் தார். அங்கு, . 'குலுக்கென்று சிரித்த முல்லை மலர்க்கொடி கண்டேன்; மகிழ்ச்சிகொண் டேனே' 4 முல்லை மகிழ்ச்சி தந்ததைத் தெரிவிக்கின்றார். இஃது அவர் ஐங்கு 454, நற் , 389 : 3, 4 பொருந் : 195-200. - பாரதிதாசன் கவிதைகள் : . முதற்தொகுதி ; சிரித்த முல்லை ; 7, 8.