பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167


படை வீரனது போர்த்துடிப்பு அடங்காமை - மற ശ്രയെ மன்னனது கொற்றக்குடைச் சிறப்பு - குடை முல்லை அறிவிற்சிறந்தசான்றோரதுசால்பின்சிறப்பு - சால்பு முல்லை! இவையன்றிக் கார்காலச் சிறப்பைக் கூறும் கார் முல்ல்ை, கற்பின் சிறப்பைக்கூறும் கற்பு முல்லைகள் உள. இங்கு 'முல்லை என்ற சொல் புகழ், பெருமை, சிறப்பு மேம்பாடு முதலிய பொருள்களுக்குப் பயன்பட்டது. இதற்கு முல்லை' என்னும் சொல்லைக் கொண்ட காரணம் ஆழ்ந்து காணத்தக்கது. முல்லை, தமிழர் தம் அகவாழ்வில் இன்றியமையாத இடம் பெற்றது; அதனால் அகத்துறையில் காதல் அன்பு சிறந்தது. கற்பின் சின்னமாகிக் கற்பு புகழ் பெற்றது; இல்லறம் அமைந்து மேம்பாடடைந்தது. வாழ்வே பெருமை கொண்டது. இவற்றை உள்ளோட்டமான கருத்து களாகக் கொண்டு புறத்திணையுள் முல்லைப் பெயரில் துறைகள் அமைக்கப்பட்டன, - இவ்வாறு முல்லை, பெயர் பெற்றுப் பேரும், பெருமை பெற்றுப் புகழும் கொண்டு பேரும் புகழும் பெற்ற முல்லையாயிற்று. இப்பெருமைக்குரிய முல்லை சூடப்படாது விடுக்கப்படும் காலம் உண்டு. முன்னர் கணவன் பிரிவின்போது மனைவி சூடாள் என்பதை அறிந்தோம். துக்க காலத்தில் எவரும் சூட மாட்டார். பொதுவில் எம்மலரையும் குடார். சிறப்பாக முல்லை மலரைச் சூடார். பெருஞ்சாத்தன் என்பவன் ஒல்லையூரில் வாழ்ந்த குறுநில் மன்னன். அவன் போரில் இறந்துவிட்டான். அதனை முல்லை அறிந்ததா என்ன? காலச்சூழலில் அது பூத்து நின்றது. ஒருவரும் இதனைக் கவனிக்கவே இல்லை. பயன்படுத்தாமலிருக்கும்போது பூத்த முல்லையை அம்மன்னன்மேல் பெருவிருப்புடைய புலவர் குடவாயில் கிரத்தனார் பார்க்கின்றார். தான் பெற்றுள்ள அவல உணர்வில் 'முல்லையே! அருமையானவன் இறந்தான் என எண்ணாமல் பூத்துள்ளாயே! அவனை இழந்து நான் உயிரோடு இருப்பதுபோல், நீயும் பூத்தியோ’ என்று ஓலமிடுகின்றார். இவ்வாறு பூத்திருக்கும் முல்லையைத் துயர மிகுதியால், ... -- ... * * 1. புற. வெ. மா : நூற்பா : 8