பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

A  : រ៉ឺម៉ៃ பெடுத்தது. குழல் வழியே நரம்புக் கருவியாம் யாழ் எழுந்தது. பிற இசைக்கருவிகள் யாவும் குழல், யாழ் இரண்டின் வழி உண்டானவை. முதல் இசைக்கருவிகளாகிய குழலிலும் முல்ல்ை ஊதியது: யாழிலும் மீட்டியது. குழல், முல்லை மலர்கின்ற முல்லை நிலத்துக்கு உரியது . அக்குழல் பல வகையில் அமைந்தது. அதில் முதல் வகை முல்லையந் தீங்குழல்' எனப்பட்டது. இப்பெயர் முல்லைப் பண்ணை எழுப்புவதால் பெற்ற பெயர். ஆயினும், இக்குழலின் வடிவமைப்பில் முல்லைக்கொடி இடம் பெற்றது. புல்லாங்குழலின் வளைவாயிடத்தில் முல்லைக்கொடியை முப்புரியாகத் திரட்டி வளைவாகப்பண்ணிச் செறிப்பர். இது 'முல்லைக் குழல்’ எனப்படும். 'முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி’1 -என்று சிலம்பு ஊதுகின்றது. குழல் வழி எழுந்த யாழிலும் "முல்லை யாழ்'உண்டு. இஃது இசைத்துறையில் அடித்தளம் அமைத்தவற்றில் ஒன்று. இதனையே செல்வழி யாழ்' என்பர். பன்னினை வழங்கும் நரம்புத் தெரிப் பால் யாழ் நான்கு வகைப்படும், அவற்றுள் ஒன்று முல்லையாழ். அது வழங்கும் பண், நோதிறம், பெயர்திறம், சாதாரி, முல்லையென நாலும் செவ்வழி நல்யாழ்த் திறனே' என நான்கு வகைப் படும். இதற்கு விளக்கமாக, 'செவ்வழி யாழ், முல்லையாழ்' எனவும் வழங்கும் என்பதும் முல்லை, சாதாரி என்னும் பண் பெயர்கள் தம்முள் வேறு பாடு இன்றி வழங்கப்படும் என்பதும் ஆராய்ச்சியினால் தெளி வாகின்றது” - என்ற விபுலானந்த அடிகளார் முடிவைக் கொள்ளலாம். முல்லை இவ்வாறு இசைக்கருவியாகவும் பண்ணாகவும் திகழ்வதையும், . 1 சிலம்பு s 17 :21. - 2 பிங், நி : 1879