பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184


ஆம்பல் குடும்பம் . . * * ஆம்பல், குவளை, நெய்தல், காவி -என நான்கு வகை கொண்டதாகும் பிற சொற்கள் யாவும் இவை நான்கிற்கும் அமைந்த மாற்றுப் பெயர்களாகும். அவற்றுள் அல்லி ஒர் ஐயத்தை எழுப்பும் அளவில் பரிபாடலில் ஒர் அடி உள்ளது. 'அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்' -என்றுள்ளமை அல்லி செங்கழுநீராம் குவளையிலும், ஆம்பலிலும் வேறு பட்டதாகத் தனி ஒரு வகை போல உள்ளது. இது தனிவகை அன்று என்பதனை அறிய அல்லி பற்றி அறிதல் வேண்டும். உலகத்தில் வழங்கும் - இலில்லி Lilly - என்பதன் முன்னுருவம் அல்லி. இன்றும் தமிழகத்தில் அல்வியே பொது மக்களால் ஆம்பல் முதலிய எல்லா வகைக்கும் வழங்கப்படும் சொல்லாகும். உலக அளவில் அல்லியின் நிறம் பெரும்பான்மை வெண்மையாகவே கூறப்படும். அகர முதலிகளும் வெண்மை யையே அதற்கு முதன்மை நிறமாகக் குறிக்கின்றன. எனவே, அல்லி என்பது வெண்மை நிற ஆம்பல் எனலாம். இதனைப் பிங்கல நிகண்டு, அல்லி வெள்ளாம்பல் கைரவம் ஆகும்'2 என்று காட்டு கின்றது. மேலும், 'சிறுவெள்ளாம்பல் அல்லி உண்ணும்' என்னும் நானூற்றுக் கருத்து அல்லி என்பது வெள்ளாம்பலின் மாற்றுப் பெயர் என்பதற்குத் துணை நிற்கின்றது. எனவே, அல்லி ஒரு தனிவகை அன்று. - . குமுதம் என்பதும் பெ சொல். சங்க இலக்கியங்களி மிகுதியாகப் பேசுகின்றன. ருவழக்காக உள்ளது. ஆனால், இச் ல் இல்லை. பிற்கால் இலக்கியங்கள் எனவே, தொல்காப்பியத்தில் 'அம் ኳ 1. பரி : 1.2 78 2. பிங், தி : 802. 8 புறம் 280 : 18