பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185


இறுதியுடையதாகக் குறிக்கப்பட்டதில் அடங்காததாகும். பிற் காலத்தார் பொதுவாக இரவில் அலரும் ஆம்பல் இனத்திற்கு இச்சொல்லைக் கையாண்டுள்ளனர். "இந்தப் புவியில் இரவலர் (இரவு அலர்) உண்டென்பதெலாம் அந்தக் குமுதமே அல்லவோ?’ -என்றும் “... ... ... குமுதமொடு சதவிதழ்ப் போதுமே (தாமரை) இரு போதையும் தெரிக்கும்' என்றும், பொதுவில் இரவில் மலர்வதற்குப் பொதுப்பெயராகக் காட்டப்பட்டது. ஆயினும் பிங்கல நிகண்டு, 'வெள்ளாம்பல் சேதாம்பல் என்றிரு விகற்பம் கொள்ப மன்னோ குமுதப் பெயரே' -என்றும், "ஆம்பலும் நெய்தலும் அல்லியும் குமுதம்" -என்றும் ஆம்பல் குடும்பத்தின் யாவற்றிற்கும் பொதுப்பெயராகக் காட்டி யுள்ளது. அதனால், கணக்குக் குறியீடுகளில் பிற்காலத்தவரால் 'குமுதம் சொல் கொள்ளப்பட்டது. எனவே, குமுதம் என்பது பிற்காலத்தில் நேர்ந்த ஒரு பொதுப்பெயர். ஆம்பலின் தனி வகை அன்று. அடுத்து, "கழு நீர் என்னும் சொல் பரவலாகவும் சிறப்பாக வும் குறிக்கப்படுவது. சுருக்கமாகக் குறித்தால் கழுநீர் என்னும் அடைமொழியற்ற சொல் ஆம்பலைக் குறிக்கும். செங்கழுநீர் என்பது செங்குவளையைக் குறிக்கும். எனவே, இஃதும் தனி வகை அன்று. முடிவாக, நான்கு வகையாக அமையும் ஆம்பல் குடும்பத்தையும் அதன் மாற்றும் பெயர்களையும் பின்வருமாறு பட்டியல் இடலாம்: குடும்ப வகை மலர் அடையாளம் மாற்றுப் பெயர் 1. ஆம்பல் - செவ்வாம்பல் கழுநீர், அரக்காம்பல், சேதாம்பல் செங்குமுதம், செவ்வல்லி. - வெள்ளாம்பல் அல்லி, கைரவம். 2. குவளை - செங்குவளை செங்கழுநீர்,கல்லாரம்,எருமணம். கருங்குவளை நீலம், பானல், நீலோற்பலம். 1. நந்தி. க : தனிப்பாடல் 8 பிங் நி : 3021, 8024 2 முத். கு. பி. த : 83