பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் ஒரு பூக்காடு;pdf/24 மெய்ப்பு பார்க்கப்பட்டது

3.குணம் பத்து (மணம்,மென்மை, வண்ணம்,தூய்மை தண்மை,சுவை,ஒளி, எழில்,கவர்ச்சி,மங்கலத் தன்மை)

4.குடும்ப வகை நான்கு (கோட்டுப்பூ,கொடிப்பூ, நிலப்பூ,நீர்ப்பூ)

5.பூ இதழ் வகை ஏழு (இதழ்,அதழ்,கோடு, ஏடு,மடல்,தளம், பாளை)

6.பூங்கொத்து வகை ஏழு (கொத்து,தொத்து, துணர்,இணர்,மஞ்சரி, தொடர்ச்சி,குலை)

என்பதாக இவற்றை இலக்கியச் சான்றுகளுடன் விரிவாக விளக்கும் ஆசிரியர் மக்கள் முடி,கழுத்து, தோள்,மார்பு போன்ற இடங்களில் அணியும் மலரணிகளின் அமைப்பையும், பெயர்களையும் வேறுபடுத்திக் காட்டுகின்றார்.

    பூக்கள் பற்றிய அரியச் செய்திகள்

இவ்வாறு பொதுச் செய்திகளை விளக்கிய பின்னர் ஆசிரியர் தனித்தனிப் பூவை எடுத்துக் கொண்டு அப் பூ பற்றிய முழு விவரங்களையும் இலக்கியங்களில் அவை ஆளப்பட்டுள்ள இடங்களையும், விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக்கூறியுள்ளார். அவற்றிலிருந்து நாம் பல்வேறு அரியச் செய்திகளை அறிகிறோம்.அதாவது,

1.ஒரு காளை தான் அணிந்திருந்த முல்லைப் பூவை ஒரு கன்னியின் கூந்தலில் சூட்டினால் அவள் அவனுக்கு உரியவள் ஆகிவிடுவாள்.

2.பெண் மங்கைப் பருவம் அடையும்போது அவள் தன் வீட்டு முற்றத்தில் ஒரு முல்லைக் கொடியை நடுவாள்.அம்முல்லை பூக்குங்கால் அவள் கன்னிமைத் தன்மை அடைவாள்.முல்லை பூப்பது அவள் கன்னிமை மலர்ந்ததன் அறிவிப்பாகும்.

3.கன்னியாக இருந்தப் பெண் முல்லையைச் சூடினாலே கற்பில் அமைந்து மனைவி ஆகிவிட்டாள் என முல்லை கற்பின் அறிகுறியாகப் பேசப்படும்.

4.நெல்லையும் அரும்பவிழ்ந்த முல்லை மலரையும் சேர்த்து வாழ்த்தும் போது தூவுதல் மரபு.மெய்ப்பு பார்க்கப்பட்டது