பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204


திறனில் யாழே நெய்தல் யாழாகும்' . -என்று சேந்தன் திவாகரம் காட்டுகின்றது. நெய்தல் யாழ் என்பது மீட்டி இசைக்கும் உருவம் கொண்டதன்று. ஒர். ஒலியமைப்பு. இவ்விசையைத் "துத்தம் இளியிற் பிறக்க நெய்தல் யாழ்': -எனச் சிலப்பதிகார மேற்கோள் பாடல் கூறுகின்றது. இதில் கருத்து மாறுபாடு உண்டு. யாழ் நூல் ஆசிரியர் தவத்திரு விபுலானந்த அடிகளார் நெய்தல் யாழ் என்பதனை முழுதுமாய் ஏற்கவில்லை. விளரியாழின் பெயர் என்ற அளவில் இசைவார். இருப்பினும் நெய்தலின் பெயரால் இப்படியொரு கருத்திருக் கின்றது. நெய்தற்பெயர்கொண்ட தோற்கருவி உண்டு. அதற்கு நெய்தற் பறை' என்று பெயர். இஃது அவலத்திற்கு முழங்கப் படுவது. மணப்பறை, சாப்பறை என்பனவற்றில் இது சாப்பறை, உலகத்தில் இன்பமும் துன்பமும் இயல்பு என்பதை விளக்க எழுந்த பக்குடுக்கை நக்கணியார் என்னும் புலவர் ஒர் இல்லத்தில் காப்பறை கொட்ட, ஒரில்லத்தில் மேளதாளத்தோடு இன்னிசை ததும்புவதைக் கூறியுள்ளார். இந்த அவல நிகழ்ச்சியை, 'ஒரில் நெய்தல் கறங்க”8 -என்றுநெய்தற் பறையைக் குறித்தார். இவ்வாறு நெய்தல், திறம் என்னும் இலக்கணத்தால் இசைத் தமிழிலும், பறை இசையால் தமிழிசையிலும் இடம் பெறுகின்றது. முன்னர் முல்லைக் குழல் என்றொன்று கண்டதுபோன்று ஆம்பற் குழல் உண்டு. ஆம்பல் என்றொரு பண்னும் உண்டு. இதனை முன்னரும் கண்டோம். இந்த ஆம்பல் இசையை வண்டினம் வெளவாத ஆம்பல்' என்றனர். ஆம்பல் மலராயின் வண்டு மொய்க்கும். வண்டு மொய்க்காத ஆம்பல் என்றால், زفيي پ9يي{ இசைக்குக் குறி. ஆம்பல் மலரிலிருந்து ஆம்பல் பண்' என்பதைப் பிரித்துக் காட்டச் சில அடைமொழிகளை இசைநூல் சேர்த்தது. இசை மொழியப்படும். வாயால் வெளியாகும், முத்துப் போன்ற பற்கள் வழிவரும். இவற்றால் "மொழியாம்பல் வாயாம்பல், | சேத், தி : ஒலிப்பெயர் 2. சிலர்பு : ஆங்ச்சிங்க் குரை ಬೃpಹ್ಲಿ : 94 : 1. " 24 மேற்கோள் பாடல் 簿