பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

பிங்கல நிகண்டு காலப் பெயர் வாய்பாட்டில் குவளையைக் காட்டுகின்றது. அதனால் எண்ணிக்கைக் குறியீடாகவும் அமைந்தது. அணி அணியாகப் படைகளை வகுக்கும் கணக்கில் 3 சேனைமுகம் கொண்டது ஒரு குமுதம் எனப்படும். குமுதம் என்னும் சொல்லுக்குத் தென்மேற்குத் திக்கு, திக்கு யானைகளின் ஒன்று, நெய்தல், அரும்பு, பேராரவாரம், தருப்பை எனப்பல பொருள்கள் அமைக்கப்பட்டன. இலக்கியங்களில் இலக்கிய மாந்தர் பெயர்களும் குமுதமாக அமைந்ததை காண்கிருேம். திருமாலின் மடைப்பள்ளிக்காரனுக்குக் 'கு முதன் என்று பெயர். இராமாயணத்தில் ஒரு குரங்கினத்துத் தலைவனுக்குக் குமுதன்' என்று பெயர் சூட்டப்பட்டது. புதிதாகத் தமிழகத்தில் புகும் யாதாகவிருப்பினும் அது பெருத்த ஆரவாரம் செய்யும் என்பதற்குக் குமுதத்திற்குப் பேராரவாரம்’ என்னும் பொருள் அமைந்ததே சான்றாகும் போலும். ஆம்பல் இசையும் அல்லிக் கூத்தும் ஆம்பல் குடும்பம் தொல்காப்பியத்தில் இடம் பெற்றது; அதனால் இலக்கணம் பெற்றது. இலக்கியங்கள் யாவற்றிலும் இடம் பெற்றது; அதனால் இலக்கியம் பெற்றது. இலக்கணத்தை யும் இலக்கியத்தையும் பெற்றதால் இயற்றமிழில் இடம்கொண்ட தாயிற்று. - இயற்றமிழைத் தொடர்ந்து இசையிலும் கூத்திலும் இடம் பெற்றுள்ளது. இசை, தமிழில் இசைத்தமிழ், தமிழிசை என இருவகைப்படும். இசைத்தமிழ் என்பது இசைக்குத் தமிழில் கூறப்படும் வரையறை - இலக்கணம். தமிழிசை நடைமுறைப்பட்டுப் பாடப்படுவது. இவ் விரண்டிலும் இக்குடும்பம் இசை பெற்றது. - இசைத்தமிழில் குரல், துத்தம் முதலிய ஏழில் இளி என்னும் இசை நெய்தல் மணம் கொண்டது. இசையிலக்கணத்தில் திறம் என்பது ஒரு வகை. - tł, " "