பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214


வளர்க்கப் படாமல் தானே பூக்கும்; பறிக்கத் தடையில்லை; மணமலர்கள் பலவும் விலைக்கு விற்கப்பட ஆம்பல் இன மலர்கள் விற்பனைக்கு வராமல் எளிதிற் கிடைப்பன. இஃதும் வில்லப் பூ எனப்படும். எனவே ஆம்பல் இனமலர் மக்கள் மலர். மக்கள் மலரோடு மக்களுக்கு அறிவூட்டவும் பயன்பட்ட மலர். மலர்த் தண்டு நீர் வெள்ளத்தின் ஆழ அளவு நீளமானது. 'நீரளவே ஆகுமாம் நீராம்பல்" - இதுபோல ஒருவர் 'கற்ற நூல் அளவே ஆகும் நுண்ணறிவு' இது அவ்வை வாய்ப்பட்ட ஆம்பல். அறிவுலகத்தில் அறங்கூறி மக்களை வளப்படுத்தும் ஆம்பல் நாட்டு வளத்திற்கும் அறிகுறியாக விளங்கியது. வளையல் அணிந்த பெண்கள் குறாது விட்ட ஆம்பலே கணக்கற்றுப் பூத்திருக்கும். இஃது ஒர் ஊரின்-ஒரு நாட்டின் புதுப் புது வருவாயின் அறிகுறியாகும். " வளைமகள் குராஅது மலர்ந்த ஆம்பல் அறாஅ யாணர் (புதுவருவாய்) அவர் அகன்றலை நாடே'2 - என நாட்டுவளம் ஆம்பலால் குறிக்கப்பட்டது. இவ்வளம் தாமரையோடு இணைத்துப் பேசப் படுவதையும் காணவேண்டும் நீர்ப்பூக்களில் தாமரை பெரியது; வளமானது. வளமான ஆம் பலும் தாமரை போல மலரக்கூடியது. "கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஊர' 3 என்று வளமான ஆம்பல் மலர்ச்சி தலைவனது ஊர்க்கும் சிறப்பாயிற்று. இதுவயல் வளம். 1 முது : 1. . 2 பதி :28, 28 - 25, 8 ஐங் 88,