பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
229


இப்படி முழுக்க முழுக்கத் தாமரையைத் திருமாலியத்தார் முழுக்குத்தகையாக்கிக் கொண்டதைச் சைவத்தார் பார்த்தனர். அவரையே சிவனுக்குள் அடக்கிவிட்டால் குத்தகைக்கு மேல் குத்தகையாகிவிடும் அன்றோ? அதற்கு அன்னார் வடித்துக் கொண்ட கதை: சிவனைத் திருமால் வழிபட்டாராம். 'திகழும் மாலவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள்மலர் குறைய, புகழினால் அவன்கண் இடத்திடலும் - புரிந்து சக்கரம் கொடுத்" - தாராம். திரு மால் சிவனை வழிபட எடுத்த ஆயிரம் மலர்களும் தாமரை மலர்கள். ஒரு தாமரை குறைந்தது. தனது கண்ணும் தாமரையாகையால் அதனையே தோண்டி எடுத்து வழிபட்டார். அதற்குப் பரிசாகப் பெற்றதுதான் அவரது கையிலுள்ள ஆழிப்படை எனப்பட்டது. இக்கதையை அப்பரும் சுந்தரரும் மாணிக்கவாசகரும் வேறு பல சைவச் சான்றோரும் பன்னிப் பன்னிப் பாடினர்; பேசினர். அவருக்கும் தாமரையை உரித்தாக்கி, 'புண்டரிகத்து (வெண்டாமரையில்) உள்ளாய் போற்றி' 'முடித்தாமரை அணிந்த முர்த்தி போலும்’ -என்றெல்லாம்திருநாவுக்கரசர் பாட, மாணிக்கவாசகர், செந்தாமரைக் காடு அனைய மேனி'2 -எனத் தாமரைக் காடு ஆக்கினார். திருமாலும் தாமரைக்காடு; சிவபெருமானும் தாமரைக்காடு. சிவபெருமானது இளங்குமரன் திருமுருகனும் 'திருவின் அலர் சோதி இளஞாயிறென முகை அவிழ்த்து ஏடு விரி தாமரைக்காடு'8 ಹTು ರಿಕಿಟಕಿ ೧60ಕಿ.UTು மனம் பிடித்த மலர்க்கோவில் முருகன் பிறப்பிடமே ஆறு தாமரை மலர்கள். பரிபாடல் நளினத்துப் பிறவியை" என்றும் “பயத்தோர் என்ப பதுமத்துப் 1 சுந்.தே. ஆவடுதுறை : 8. 8 முத். பி. த: 58, 2 திருவர் திருச்சதகம் : 26,