பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இசைக்குறி மலர்

L||[6}6]]

ஏழிலைப் பாலை

சுரமும் சுரம் சார்ந்த நிலமும் பாலை எனப்பெயர் பெற்றன பாலைப்பூ பற்றிய செய்திகள் மிக மிக அருகியுள்ளன. பாலையால் நிலம் பெயர் பெற்றிருப்பினும் அந்நிலத்துக்குரிமையுள்ள பூவாகப் பாலை எவராலும் இலக்கணத்திலோ இலக்கியத்திலோ குறிக்கப் படவில்லை. உரையாசிரியர்களாலும், நம்பியகப் பொருளிலும் குராம் பூவும், மராம் பூவுமே நில உரிமைப் பூக்களாகச் சொல்லப் பட்டுள்ளன. மருதப் பூவின் நிலையே இதற்கும் அமைந்தது. பாலைப் பூவைவிட, பாலை மரச்செய்திகள் அதிகமாகக் கிடைக்கின்றன. அதனையும் விட, பாலைத் தொடர்பில் இசைத் செய்திகள் பல்கிக் கிடைக்கின்ற, பாலையில் வெட்பாலை, கொடிப்பாலை, கருடப்பாலை உலக்கைப்பாலை, ஏழிலைப்பாலை எனப்பலவகை உள்ளன வெட்பாலையையே ஏழிலைப்பாலை எனவும் கருதுவர். இவற்றின் மலர்கள் பலவகை அமைப்புள்ளவை. பலவகை நிறத்தன. எந்தப் பாலை அகத்திணைக் குறியீடாகக் கொள்ளப்பட்டது? ஏழ் பாலை இயற்றமிழில் பாலை இடம்பெற்றதைவிட இசைத்தமிழில் பெற்ற இடம் அதிகம். இப்படிக் குறிப்பதைவிட பாலை என்னும் சொல் இசைத்தமிழில் ஆட்சி செலுத்துகின்றது என்னும் அளவில் இன்றியமையாததாக அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மலர்ப் பெயர் களுக்குக் கிடை த்தமை போன்று யாழ், பண் முதலியவற்றில் பாலை இடம் பெற்றது. அதற்கும் முந்திய நிலையாக இசையின் அனைத்துத் துறையும் பாலையைக் களமாகப் பெற்றவ்ை,