பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இலுப்பை -ബ* இலுப்புக் இருப்பைக்காடு, இலுப்பை, பாதிரி - திருப்பாதிரிப் புலியூர். சண்பகம் - சண்பகாடவி தில்லை - திருத்தில்லை பருத்தி - பருத்தியூர் எருக்கு - எருக்கத்தம்புலியூர் பூளை - இரும்பூளையூர். முல்லை, குறிஞ்சி, காஞ்சி பெயரால் பத்துப்பாட்டில் முறையே முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, மதுரைக் காஞ்சி உள்ளன. வஞ்சிப் பூவின் பெயரால் வஞ்சிப் பா எனும் ஒரு பாவகையும் பேர் வஞ்சி, வஞ்சி மாலை எனும் புற நூல்களும் உள்ளன. தும்பையின் பெயரால் தும்பை மாலை எனும் சிற்றிலக்கியம் உள்ளது. முள்ளியால் முள்ளியார் எனும் புலவரும் ஞாழலால் மதுரை அளக்கர் ஞாழலார். குமிழி ஞாழலார் நப்பசலையார் என்னும் புலவர்களும், முசுண்டை மலரால் குறு நில மன்னன் ஒருவனும், வள்ளி மலரால் முருகன் மனைவியான வள்ளியும் பெயர் பெற்றுள்ளதும் அறியத்தக்கதாகும்.

பூக்களும் மருத்துவமும்

தமிழ் நிலப் பூக்கள் பல மருந்துப் பொருள்களாக விளங்கு கின்றன. அத்தகு மலர்கள் எவை என்பதையும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.

1. முல்லை மலர் மணம் காதல் உணர்வு தரும்; உடம்பில் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியையும் தரும். 2. இலவம் பூவைக் கொண்டு கறுக்கு நீர் செய்து குடிப்பர். இது குருதிப் பெருக்கை அடக்குவது; மலம் இளக்கி; சிறு நீரைப் பெருக்கும். இலவம் பஞ்சு சீழை வற்றச் செய்யும். 3. தாழம் பூ மணம் பூச்சிக் கொல்லி. அம்மை நோய் கண்ட இல்லத்தில் இம் மலரைக் கட்டித் தொங்கவிடுவதால் அந்நோய் வளர்க்கும் நுண்ணுயிரிகள் அழியும். தாழை மடலிலிருந்து வடிக்கப்படும் பனிநீர் அம்மை நோய் மருந்து. பனையோலைச் சுவடிகளைப் பூச்சிகள் அழிக்காமல் பாதுகாக்கத் தாழை மலர் மணம் பயன்படும். -