பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322


பூக்களைத் தரும் மரங்களின் மிகுதியும் தகுதியும் கருதிக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். - பனை, தமிழ்நாட்டுத் தேயமரம்' என்னத் தக்க அளவில் எந்நிலத்திலும் காணப்படுவது. 'பனையாயிரம், பாம்பாயிரம், சிட்டாயிரம்' என்றொரு பழமொழி ஆயிரக்கணக்கில் பனை கூடி இருப்பதைக் காட்டுகின்றது. இன்றையத் தமிழகத்தில் மட்டும் நான்கு கோடிப் பனை மரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆர் மரமும் இவ்வாறு செறிந்திருந்தது. கரிகால் வளவன் காடுகெடுத்து நாடாக்கினான். அவன் கெடுத்த காடுகளில் மிகுதி ஆர்க்காடு. இன்றும் வட ஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டப் பெயர்கள் இவ்வுண்மையைச் சொல்கின்றன. ஒரு காலத்திற் பெருகியிருந்த இம்மரக்காடு அழிக்கப்பட்டதால் இக் காலத்தில் அருகிப்போயிற்று. வேப்பமரம் ஒரே இடத்தில் செறிந்து காணப்படாவிடினும் எங்கும் பரவலாகக் காணப்படுவது. மிகுதியும் அறிமுகமானது. இம்மூன்று மரங்களும் மிகுதி நிலை கொண்டவை. மற் றொரு தகுதி நிலையும் உண்டு. இவை மூன்றும் தீங்கு நேராமல் தடுக்கும் மண வீச்சு கொண்டவை. இவ்வகையில் யாவராலும் அறியப்பட்ட சான்றாக வேம்பைக் கொள்ளலாம். இதன் மண வீச்சு நோய்தரும் நுண்ணுயிரிகள் தாக்காமல் தடை உண்டாக் கும் தகுதி உடையது. இன்றும் அம்மை நோய்த் தடையாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆரின் நார் குழந்தை நோய்த் தடை யாகக்கொள்ளப்படுவது. பனையோலைப்பாய் ஒரு நோய்த் தடை, இவற்றின் காற்று வீச்சு தீங்கு தரும் கேடுகளை அனுக விடாது. இதனால் இம் மூன்றும் காற்றாவி எனத் திங்கு தருவதாக உருவகம் செய்யப்பட்ட பேய்க்குப் பகையாயின. வேம்பிற்குக் காற்றாவி வெம்பும்; ஆரிடம் அணுகாது; பனையில் பேய் பதுங்காது. . . எனவே, இம்மரங்களின் மிகுதி கருதியும், தீங்குத் 啤。 | 萝 குத தடை யாம் தகுதி கருதியும் இவை மூன்றும் தேர்வபெற்றிருக்கம் &,旅 క్ష్యూల్డా అ9835ఆ Tr