பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335


மஞ்சள் நிறப் பொன்காசு -பொருந்திய உவமை களாயின. அவர் சொல்லில், - 'புதுநாண் துழைப்பான் துதி மாண் வள்ளுகிர் (நகம்) பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்’ (ஒத்திருக்கும்) - எனக் காண்கின்றோம். இதுகொண்டு அக்காலத்தில் ஒருவகைப் பொன் காசு வேப்பம் பழம் போன்று நீண்ட திரட்சியாக இருந்ததை யும் அறிகின்றோம். வேப்பம் பழம் விள்ளும் கருத்து இது. இவ் வேப்பமரம் கிளைகளைப் பரப்பித் தழைத்திருக்கும். இதன் அடிநிழலில் பலரும் கூடுவதால் மன்றம் ஆயிற்று. இதனால் 'மன்ற வேம்பு’ எனப்பட்டது. வேப்பம் பூங்கொத்து சிறிய வெண் சாமரைக் கவரி போன்றது. விடுகதையும், கவரிபோல் பூ பூக்கும்' என்றதன்றோ? இளவேனிற் பூ வேம்பின் பூ கிளையின் சினையாகிய சிறு கொப்பில் பூக்கும். அதனால், சினையலர் வேம்பு’ எனப்பட்டது. ஒரு கொப்பில் பல இனுக்குகள் கிளைத்திருக்கும். ஒவ்வொரு இணுக்கிலும் சில காம்புகளில் இப் பூ மலரும். யாவும் சேர்ந்த ஒரு கொப்புப் பூ நீண்ட கொத்தாகக் காட்சி தரும். கடியலூர் உருத்திரங் கண்ணனார். 'கோட்டு இணர் வேம்பு' என்றபடிஇஃது.ஒரு கொத்துப்பூ. கோட்டுப் பூ இனத்தைச் சேர்ந்தது, இதன் அரும்பு வெண்மையாக நீண்டிருக்கும். வயல் நண்டின் கண் வெளியே துருத்திக் கொண்டு நீண்டிருக் கும்; வெண்மை நிறமானது. இதற்கு, வேம்பு நனையன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு'2 -என வேம்பின் அரும்பு உவமையாகக் கூறப்பட்டது. வயல் நண்டின் .--ബ് 1. கவி 92 : 17 2 அக : 176 : 8