பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/395

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359


பூவிற்கு விதி வகுக்கப் புகுந்தார் கமலை ஞானப்பிரகாசர். புகுந்தவர், கொடிப் பூக்களைப்பட்டியலிட்டார். அதன் புகுமுகமாக, 'மருவாரும் காந்தள், காட்டு மல்லிகை, முல்லை, மெளவல்." . -எனக் காந்தளை முந்தி வைத்தார். s கபிலரது குறிஞ்சிப் பாட்டும், கமலை ஞானப்பிரகாசரது புட்பவிதியும் பூக்களை அடுக்கிக் காட்டும் இலக்கியங்கள். முன்னது முற்காலத்து நூல்களுள் பூத்தொகுப்பைப் பொறுத்த அளவில் முதல் நூல். பின்னது, பிற்காலத்து நூல்களுள் இதுவரை இறுதி நூல். இவ்விரண்டு எல்லையான நூல்களிலும் காந்தள் முந்திடம் பெற்றுள்ளமை காந்தளுக்கு ஒரு சிறப்பு. இச்சிறப்பு நாமாக இழுத்து இணைத்துக் காண்பதாகவும் ஆகலாம். ஆனாலும், இதன் முதன்மைக்கு மற்றொரு பிடிப்பும் இருக்கின்றது. சங்க இலக்கியங்களில் பூக்கள் பெற்றுள்ள இடங்களைத் தனித் தனியே எண்ணினால் காந்தள்தான் முதலிடம் பெறுகின்றது. மிகுதியான இடத்தைப் பெற்றுள்ள வகையில் ஒருவகை முதன்மை இதற்கு அமைகின்றது. நிகண்டுகள், காந்துகம் தோன்றி பற்றை கோடல் என் ராய்ந்த நான்கும் காந்தள் ஆகும்'2 -எனக் காந்தளின் பெயர்களைக் காட்டுகின்றன. மேலும் 'கோடை, இலாங்கலி' என்னும் பெயர்களையும் நிகண்டுகள் காட்டு கின்றன.(இலாங்கலி' என்னும் பெயரைத் தென்னைக்கும் உரியதாக அந்நிகண்டுகள் கூறுகின்றன.) - இதன் வேர்ப்பகுதியாகிய கிழங்கு, கலப்பை வடிவில் அமைந்திருப்பதால் கலப்பைக் கிழங்குக் கொடி’ என்று வழங்கப் படுகின்றது. இதன் இலை வெற்றிலை வடிவில் சற்று நீட்சி கொண்டது. இவ்விலையின் துணியில் பற்றிப் படர்வதற்கேற்ற சுருள் நரம்பு இருப்பதால் 'தலைச்சுருளி எனப்பட்டது. இதன் காய் காக்கையின் மூக்கு வடிவத்தில் உள்ளதால் 'காக்கை மூக்குக் கொடி' என்றுபேசப்படுகின்றது. இம்மூன்றுபெயர்களும் கொடிக் குரிய பெயர்கள். r 1 பு. விதி: , ; , 2 சே. தி: மரப் பெயர்ப்பகுதி so - 8 சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்-பக்கம்: 64 திரு பி.எல்.சாமி.