பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377


குருதி ஒப்பின் கமழ்தண் காந்த’ளாக (நற்: 399:2) 'காந்தள் குருதி ஒண் பூ' வாகப் பொதுப் பெயராம் காந்தள் பெயரிலும் குருதிப் பூ என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டது. நற்சிவப்பில் திகழும் இதழ்கள் மேல்நோக்கிக் குவிந்து நிற்கும் பாங்கும், அடியிற் சூலகமும், மகரங்களும் சூல்முடியும் தொங்கும் தோற்றமும் சேவற்கோழியின் தலையாகத் தோற்ற மளித்தது மதுரைக் கண்ணங்கூத்தனார்க்கு. அதனை, 'குவியினர் தோன்றி ஒண்பூ அன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்" - எனச் சேவற் கொண்டைக்கு உவமையாக்கினார். இதனை வழிமொழிவது போன்று திருத்தக்க தேவர், 'கொய்ம்மலர் தோன்றியோல் சூட்டுடைய சேவலும்"2 -எனக் கொய்தெடுத்த தோன்றி யைக் காட்டினார். செம்மை நிறப்பொருள்கள் பலவும் உவமையாகும் போது கேசவனார் செம்மைப் பவளத்தைக் காட்டி, 'விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி பவழத் தன்ன செம்பூ'8 -என்று 'செம்பூ என்னும் பெயரையும் தந்தார். அத்துடன் இதன் தகுதியை மென்மையாகக் குறித்தார். சூளாமணி ஆசிரியரும், "தோன்றி மென் கொடி' என்றார். இத்தகைய தோன்றி மணம் கமழ்வதும் ஆகும். தோன்றி தோன்ற வெறியேன்றன்றே வி கமழ் கானம்'5 என்றார் மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார். ருறு 107 : 1, 2 சிவ. சி:72. பரி : 14 :15, 16.

சூளா : சீய : 244 அகம் : 1.64 : 6, 7,